Page 24 of 26
”திட்டினாலும் உன்னைத்தானே நினைச்சி பேசறான் அதை பாரும்மா”
”அண்ணா நீங்க என்னையும் அவரையும் சேர்த்து வைக்க ஆசைப்படறீங்க ஆனா எனக்கு அந்த ஆசை எப்போ வருதோ அப்ப பார்க்கலாம்”
”சரிம்மா சரி உன் விருப்பம்” என சொல்லும் போதே கொம்பன் வந்தான் வேலைகளை முடித்துவிட்டு
”பார்த்தியா நான் சூரியன் மறையறதுக்குள்ள வந்துட்டேன்” என்றான் காவேரியிடம் அவளோ
”வந்தது சரி உன்னை பத்தி நிறைய குற்றச்சாட்டு வந்திருக்கு“
”குற்றச்சாட்டா என்மேலயா அதுக்கு வாய்ப்பேயில்லை”
”அப்படியா”
”ஆமாம்”
”சரி உன்னோட முதல் குற்றசாட்டு சொல்லவா”
”சொல்லு அது உண்மையா பொய்யான்னு நான் சொல்றேன்”
“அப்படியா சரி சொல்லு என்னோட பேரு என்ன”
”முறைப்பொண்ணு”
”இதுவா என் பேரு” என கேட்க அவனோ அதிர்ந்தான். கணக்குபிள்ளையோ கலகலவென சிரித்துவிட்டு