”கொம்பா நீ இன்னிக்கு தூங்கின மாதிரிதான் போ” என சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட கொம்பனோ அச்சத்துடன் காவேரியைப் பார்க்க அவளோ கடுமையாக முறைத்தாள், அந்த முறைப்பை தாங்க இயலாமல் தடுமாறியவன்
”அது வந்து” என இழுக்க
”என் பேரு என்ன, அதை சொல்லாம உன்னை நான் விடறதாயில்லை, என் பேரு சொன்னாதான் உனக்கு சாப்பாடு தூக்கம் எல்லாம் சொல்லு என் பேரு என்ன” என அவள் கோபமாக கேட்க அவனோ திடுக்கிட்டான் வசமாக மாட்டிக்கொண்டோமே என்ன செய்வது என தெரியாமல் யோசித்துப் பார்த்தான், எப்படி யோசித்தாலும் பேர் வராமல் போகவே கடுப்பானவன் சட்டென தன் மாமனாரை அழைத்தான்
”மாமா மாமா” என அழைக்க காவேரியோ
”எதுக்கு அப்பாவை கூப்பிடற அடிவாங்குவ, அவரை இதுல இழுக்காத மரியாதையா என் பேரை சொல்லு இல்லை ஆசிட் பாட்டில் ரெடியா இருக்கு உன் முகத்தை காட்டு கொட்டறேன்” என சொல்ல அவன் அரண்டான் அதற்குள் சண்முகம் வந்தார்
”மாப்பிள்ளை கூப்பிட்டீங்களா”
”ஆமாம் மாமா தோப்புக்கு தண்ணி பாய்ச்சிட்டேன் மாமா”
”அப்படியா சந்தோஷம் மாப்பிள்ளை”
”அப்புறம் உங்க பொண்ணு உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்”
”அப்படியா” என சொல்லியவர் காவேரியைப் பார்த்து
”என்னம்மா காவேரி என்ன விசயம் சொல்மா” என சொல்ல அவளோ நொந்துப் போக கொம்பனோ