(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”இதப்பாருங்க இது உங்களோட பிரச்சனை நீங்களேதான் அதை தீர்க்கனும் இதுக்கெல்லாம் கொம்பனை தேடி வராதீங்க, அவருக்கு இப்ப கல்யாணம் ஆகி குடும்பம் பொண்டாட்டியிருக்கு, வாழ வேண்டிய வயசுல அவரை அடிதடியில இறக்கி அப்புறம் அது போலீஸ் கேஸ் கோர்ட்டு ஜெயில் வரைக்கும் போனா கஷ்டப்படபோறது நான்தானே தவிர நீங்க கிடையாது” என்றாள் கோபமாக அதில் வந்தவர்கள் தலைதொங்கிப் போய் கிளம்ப முயல கொம்பன் தடுத்தான்

  

”இருங்க போகாதீங்க நான் வரேன் உங்களோட” என சொல்ல காவேரியோ

  

”கொம்பா நீ எங்கயும் போக கூடாது”

  

”அதை சொல்ல நீ யாரு”

  

”நான் உன் பொண்டாட்டி”

  

”பேருக்கு பொண்டாட்டியா இருக்கறவ பேச்சை கேட்க முடியாது நான் போறேன்” என சொல்லிவிட்டு அந்த ஊர்க்காரர்களிடம் செல்ல அவர்களோ

  

”வேணாம் கொம்பா உன் பொண்டாட்டி சொல்றதும் சரிதான், இப்பதான் உனக்கு கல்யாணம் ஆயிருக்கு இந்த சமயம் இந்த பிரச்சனையால உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா வேணாம்பா நாங்களே அதை சரியாக்கறோம்” என சொல்ல கொம்பன் கேட்கவில்லை

  

”அதெல்லாம் ஒண்ணும் இல்லை வாங்க போலாம்” என அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான். காவேரிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, கணக்குபிள்ளையோ காவேரியின் கோபத்தைக்கண்டு பயந்தபடியே

  

”பயப்படாத அடிதடி வரைக்கும் போகாத மாதிரி நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல அவளோ அவனை முறைக்க அதில் அவன் அரண்டுப் போய் கொம்பனை தேடி ஓடினான்.

  

காவேரியோ கோபமுடன் தன் வீட்டிற்குச் செல்லாமல் நேராக கொம்பனின் வீட்டிற்குச்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.