(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

சென்றாள்.

  

அங்கு கொம்பனின் தந்தை பருத்தி ஆலைக்கு செல்வதற்காக தயாராக அவருக்கு காலை உணவை பரிமாறிக் கொண்டிருந்தார் கொம்பனின் தாய்.

  

காவேரியோ தடாலடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் அவள் வரவும் அவ்விருவருக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, மகிழ்ச்சியில் திளைத்தார்கள், அவர்களது கண்கள் அவளையும் கடந்து கொம்பன் இருக்கிறானா என்றுதான் தேடியது. அதைப் புரிந்துக் கொண்டவள்

  

”கொம்பன் வரலை” என கோபத்தில் வெடிக்க அவர்களோ ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டார்கள், பாதி சாப்பாட்டில் கையை கழுவிக் கொண்டு மருமகளிடம் பேச வந்தார் கொம்பனின் தந்தை

  

”அம்மாடி மருமகளே என்னம்மா என்னாச்சி ஏன் உன் முகம் கோபத்தில சிவந்திருக்கு, ஏதாவது பிரச்சனையா ஆமா கொம்பன் வரலையா உன்கூட, தனியாவா இங்க வந்த” என வரிசையாக கேட்க அவளோ

  

”உங்க புள்ளையை நீங்க ராஜாவாட்டம் வளர்த்தீங்க, அவரை வைச்சி இந்த ஊர்க்காரங்க தங்களோட பிரச்சனையை தீர்த்துக்கிட்டாங்க, அதுவும் எப்படி அவரை அடிதடியில இறக்கி, முன்ன பரவாயில்லை அவருக்கு ஒண்ணுன்னா நீங்க கவலையில்லாம இருந்தீங்க, ஆனா இப்ப அப்படியா அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சி, அவரோட பொண்டாட்டி நான் உயிரோட உங்க முன்னாடி நிக்கறேன், நாளைக்கே அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்தா பாதிக்கப்படப்போறது எங்க வாழ்க்கைதானே” என பொங்க அவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை

  

”நீ சொல்றது எங்களுக்குப் புரியுதும்மா ஆனா காரணம் புரியலையே”

  

”காரணமா சொல்றேன் இந்த ஊர்க்காரங்க மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க அவங்க பிரச்சனையை தீர்க்க கொம்பனை கூட்டிட்டு போயிட்டாங்க”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.