ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
என்றாள் அதைக்கேட்டு இன்னும் சில மாணவர்கள் திருப்பிச் சொன்னார்கள், அப்படியே அடுத்தடுத்த வரியை அவள் சொல்ல சொல்ல அனைத்து மாணவர்களும் திருப்பிச் சொல்லலானார்கள்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
என சொல்லி முடிக்க மாணவர்களும் சொல்லி முடித்தார்கள்
”இப்ப நான் சொன்ன உலகநீதிக்கு என்ன அர்த்தம் தெரியுமா, யாராவது ஒருத்தர் விளக்கம் சொல்லலாம் வாங்க சொல்லுங்க” என அழைக்க யாரும் முன்வரவில்லை மாணவர்கள் தான் இப்படியென்றால் ஆசிரியர்கள் கூட வரவில்லை, அவளோ ஆசிரியர்களைப் பார்த்து
”நீங்க கூட விளக்கம் சொல்லலாம் வாங்க” என அழைக்க ஒருவரும் வரவில்லை அதைக்கண்டு ஆச்சர்யப்பட்ட கண்ணகி திரும்பி தாளாளரைப் பார்த்து வியக்க அவனோ நொந்துப் போனான். உதயமூர்த்திக்கு சிரிப்பாக இருந்தது கண்ணகியே மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்து
”சரி நானே விளக்கம் சொல்றேன்” என்றவள்
கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.
பிறர்மீது பழி கூறக்கூடாது. அம்மாவை மறக்கக்கூடாது. தீயவர்களோடு சேரக்கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர்