என மனதுள் திட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
அவள் வரவும் கோவலன் நடப்பதைக்கண்டு வியந்தாள்
”என்ன இவன் மனைவி பிரசவ வார்டுல இருக்கற மாதிரி பதட்டத்துல அப்படி இப்படி நடக்கறான், கண்ணகி என்னடி செஞ்ச இவனை, நல்லாயிருந்தவனை பைத்தியமாக்கிட்டாளா என்ன” என நினைத்துக் கொண்டே
”சார் கூப்பிட்டீங்களா” என கேட்க அவனோ
”என்ன சொன்ன இப்ப”
”கூப்பிட்டீங்களேன்னு வந்தேன்”
”முழுசா சொல்லு”
“சார்” என சொல்ல வர தடுத்தான்
”சார் சார்ன்னா சொன்ன என்னைப் பார்த்து”
”ஆமாம் வேற எப்படி உங்களை கூப்பிடறது நீங்க முதலாளியாச்சே நான் உங்ககிட்ட வேலை செய்ற ஸ்டாப் அப்ப சார்ன்னுதானே கூப்பிடனும்”
”சார் சார் சார் இதை கேட்கவே வெறுப்பா இருக்கு” என சொல்ல மாதவி கண்ணகியை நினைத்து உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாள்
”சூப்பர்டி கண்ணகி, நல்லாவே இவனுக்கு வேப்பிலை அடிச்சி அனுப்பியிருக்க போல இப்ப பாரு என்னோட நடிப்பை”
”சார் என்னாச்சி சார், ஏதாவது பிரச்சனையா சார், உங்க முகமே ஒரு மாதிரியா டென்ஷனா இருக்கே சார், எனிதிங் ப்ராப்ளம் சார், நான் செஞ்ச ப்ராஜெக்ட்ல ஏதாவது பிரச்சனையா சார்,