”ஏன்டா அறிவிருக்கா உனக்கு, தங்கச்சி கட்டிப்பிடிக்கறப்ப நீ என்ன செய்திருக்கனும் உடனே அவளை கட்டிப்பிடிச்சிருக்கனும்ல”
”எங்கடா அவள் வந்ததே தெரியலை பின்னாடி இருந்து கட்டிப்பிடிச்சி உடனே ஓடிட்டா எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை தெரியுமா”
”அதுசரி உங்களுக்குள்ள இப்படியொரு விளையாட்டு ஓடுதா, ஓடட்டும் தப்பில்லை கல்யாணம் ஆனவங்க சின்ன சிறுசுங்க ம் எப்படியோ ஒத்துமையா இருந்தா சரி ஆமா எங்கடா குடத்தை காணலை” என கேட்க அவனோ
”அதான் சொன்னேனே கையும் ஓடலை காலும் ஓடலைன்”னு
”அதுக்கு”
”அதுல குடம் கிணத்துல விழுந்துடுச்சி” என்றான்
”அடப்பாவி உன்னை” என கிணற்றில் எட்டிப்பார்த்து
”சே குடம் போச்சே”
”அதனால என்ன விடுடா வேற வாங்கிக்கலாம் நான் போய் குளிச்சிட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவன் குளிக்கச் செல்ல
”நீ போய் குளி நான் எப்படி குளிக்கறது சரி விடு ஒருநாள் குளிக்காட்டி என்னாகப்போகுது” என நினைத்தான் கணக்குபிள்ளை
குளித்து முடித்து ஈர டவலுடன் வந்தான் கொம்பன் நேராக அவனது அறைக்குச் செல்லாமல் வீம்புக்கு காவேரியின் அறைக்குச் சென்றான். அங்கு அவளோ கண்ணாடியில் தன்னையே பார்த்து பார்த்து பூரித்துக் கொண்டிருக்க அவளை போலவே மெதுவாக நடந்து