”இத்தனை நாளும் மதிய சாப்பாடு வேலைக்காரங்க கொண்டு வந்து தந்தாங்க, இனி நீதான் கொண்டு வந்து தரனும் நீயே சமைச்சி கொண்டு வரனும் புரியுதா” என சொல்ல அவனிடம் பதில் இல்லை
”என்ன புரியுதா இல்லையா”
”புரியுது கிளம்பறியா உசுரை வாங்காத எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு”
”என்ன முடிவெட்டப்போறியா”
“ப்ச் என்ன கிண்டலா“
”கோச்சிக்காத கொம்பா எல்லா விசயத்தையும் தெரிஞ்சி வைச்சிக்கனும், நாளைக்கு நமக்கே பயன்படும் சரியா நான் கிளம்பறேன், வீட்டை பார்த்துக்க அப்புறம் எனக்கு பிடிச்சதை சமைச்சி எடுத்துக்கிட்டு வா” என சொல்லிவிட்டு அவள் தோப்பு வேலைக்கு காரில் ஏறிச் சென்றுவிட கொம்பனோ நொந்துப் போனான்.
தோப்பு வேலையில் காவேரியும் மும்முரமாக வேலையில் இறங்கியிருந்தாள், அவளுக்கும் அசதியாக இருந்தது நேரம் வெகு வேகமாக ஓடியது, மதிய நேரம் பைக் சத்தம் கேட்கவும் யார் என பார்த்தாள், கொம்பன்தான் அவளுக்காக கேரியர் கொண்டு வந்திருந்தான், கேரியரை முன்னால் வைத்துக் கொண்டு ஊர்மக்கள் பார்க்கும்படி கெத்தாக வந்து இறங்கினான். அவனின் தோரணையைக்கண்ட காவேரியோ
”மண்ல விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை போல இருக்கே” என்றாள் அதைக்கேட்டப்படி வந்த கொம்பனோ தனது மீசையை முறுக்கிக் கொண்டு தனது வீரத்தை அவளுக்கு வெளிப்படுத்த அவளோ சலிப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவனோ பைக் விட்டு இறங்கி கேரியருடன் அவளிடம் வந்து நீட்டினான்