(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

மதிக்கலானார்கள்.

  

மஹதியும் அவ்வப்போது நடிப்பு நடிப்பு என சொல்லியே வேங்கையனிடம் காதல் விளையாட்டுக்களை விளையாட அவனோ நடிப்பு என நினைத்து அவளுக்கு துணையாக இருந்தான், ஆனாலும் சில இடங்களில் மஹதியின் செயல் அவனுக்கு சந்தேகத்தையே தந்தது

  

மஹதியும் வேங்கையனும் ஒன்றாக இருப்பதை காணும் போதெல்லாம் வயிறு எரிந்தான் மூர்த்தி, எப்படியாவது மஹதியின் மனசை மாற்ற அவனும் பல முயற்சிகளை செய்தான், ஆனால் அவனது முயற்சிகள் அவளை சென்று சேரும் முன் ஜானகி குறுக்கே வந்து தடுத்தாள், அதில் அவன் ஜானகியை வெறுத்து அவள் மீது தன் கோபத்தை கொட்டினான், எவ்வளவு கோபம் கொட்டினாலும் ஜானகியோ மூர்த்தியிடமேதான் இருந்தாள்

  

இதைக்கண்ட மூர்த்தியின் பெற்றோரும் நொந்துப் போனார்கள், ஒரு புறம் மஹதி வேங்கையன் ஒற்றுமை, இன்னொரு புறம் மூர்த்தி ஜானகியின் உறவு, இரண்டுமே அவர்களுக்கு பிடிக்கவில்லை, வேங்கையனுக்காக அந்த வீட்டிற்கு வந்தவர்கள் இப்போது ஏன்டா வந்தோம் என நினைத்து நொந்துக் கொண்டார்கள்.

  

எவ்வளவுதான் ஜானகியை பரிமளா கஷ்டப்படுத்தினாலும் அவள் சளைக்காமல் அனைத்தையும் செய்து அசத்தினாள், இதைப்பற்றி பரிமளா தன் கணவரிடமும் மூர்த்தியிடமும் சொன்னார், அதைக்கேட்ட செல்வம் கூட மனம் இரங்கி வந்தார், ஆனால் மூர்த்தி ஜானகி வேண்டாம் என்பதில் தெள்ளத்தெளிவாக இருந்தான், அது கூட அறியாமல் பாவம் ஜானகி மூர்த்தியின் மனதில் இடம்பிடிக்க பல சிரமங்களில் மாட்டி அல்லாடினாள்

  

மகாராணி போல வலம் வந்தவள் இப்போது வேலைக்காரி போல மாறிவிட்டாள், காலை முதல் இரவு வரை ஜானகி வேலை செய்து ஓய்ந்து நொந்துப் போய் தன் அறைக்கு வர அங்கு மஹதி காத்திருந்தாள், மஹதியைக்கண்டதும் கண்கள் கலங்கினாள் ஜானகி

  

”மஹதி“

  

”என்னடி இப்படியிருக்க உன்னைப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.