(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”ஆனா வயசுக்கு வந்தப்ப நடந்த நிகழ்ச்சியில மூர்த்திதானே இருந்ததா சொன்னாளே”

  

“மூர்த்திதான் இருக்கனும்னு ஜானகி ஒரே சண்டை போட்டா, அதுல குபேரன் மானம் போகுதுன்னு வேங்கையனை கெஞ்சிக் கேட்டதால வேங்கையனும் ஜானகிக்காக உரிமையை விட்டுக் கொடுத்தான், மத்தப்படி நாங்க எந்த சீரும் செய்யலை, வேங்கையன் செய்ததை நாங்க செய்ததா சொன்னோம், அப்பதானே ஜானகி நம்பினா”

  

”ஆனா ஜானகி மூர்த்தியை மலை போல நம்பியிருக்கா அவர் கிடைக்கலைன்னா அவள் உடைஞ்சிப் போயிடுவா”

  

”இதப்பாரு சின்ன மருமகளே எந்த ஒரு இடத்திலயும் மூர்த்தி ஜானகியைதான் கல்யாணம் செய்துக்கறதா சொல்லலை, ஜானகிதான் அப்படி சொல்லிக்கிட்டா நாங்களும் எந்த இடத்திலயும் ஜானகிதான் எங்க மருமகள்ன்னு சொல்லலையே“

  

”ஏன் சொல்லலை ஜானகிக்கு மூர்த்தி முறைதானே“

  

”வேங்கையன் இருக்கறப்ப நாங்க எப்படி“

  

”ஆனா ஜானகி மூர்த்தியைதானே ஆசைப்பட்டா“

  

”அவள் ஆசைப்பட்டா போதுமா அவளை பெத்தவங்க ஆசைப்படனும், மூர்த்திக்கு வேலையில்லை வெட்டியில்லை அவனை நம்பி சொத்தை கொடுத்தா அழிச்சிடுவான்னு எங்க சொத்தையே நாங்க அவனுக்கு தரலை, அவனுக்கு அந்தளவுக்கு தெளிவு கிடையாது, ஏதோ மாச சம்பளம் செய்ற வேலைன்னா செய்வான், மத்தபடி அறிவா யோசிச்சி சொந்த தொழில் செய்ற அளவுக்கு அவனுக்கு திறமை கிடையாது, வேங்கையன் பெரிசா படிக்கலைன்னாலும் அவன் திறமையானவன், நிறைய சொத்து சம்பாதிச்சி வைச்சிருக்கான், அதுல நிறைய ஜானகிக்கு தரனும்னு ஆசைப்பட்டான், அதுவே பல கோடி வரும், எங்க இதெல்லாம் அவளுக்கு தெரியாது”

  

”ஏன் சொல்லலை சொல்லியிருந்தா அவள் வேங்கையன்கிட்ட இருந்திருப்பாளே”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.