திமிரா பேசறியா”
”உண்மையிலயே நீ தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருந்தா கண்டிப்பா நான் உன்கூட வாழ்ந்திருப்பேன், ஆனா நீ என்னை ஏமாத்த நினைச்ச கடைசியில நீயே ஏமாந்துட்ட, இதுக்கு பேரு துரோகம் கிடையாது கொம்பா இது தந்திரம், நீ விரிச்ச வலையில நான் விழுவேன்னு எதிர்பார்த்த பாவம் அதுல நீயே விழுந்துட்ட, எப்படி அந்த வலையில இருந்து நீ தப்பிப்பன்னு பார்க்கிறேன்”
”இது என்னோட வீடு இங்க நான் வைச்சதுதான் சட்டம்”
”தப்பு இது உன்வீடுதான் ஆனா இங்க நான் சொல்றதுதான் சட்டமாகும்”
”அதெப்படி”
”உன் அப்பா அம்மா என் கைக்குள்ள நான் சொன்னதை அவங்க கேட்டு நடப்பாங்க உன்னையும் கேட்டு நடக்க வைப்பாங்க”
”பார்க்கலாம் நீயா நானான்னு” என சொல்ல அவளோ நக்கலாக சிரிக்க அதைக்கண்டு கொதித்துப் போய் அந்த அறையை விட்டு வெளியேறினான் கொம்பன்.
அவன் சென்றதும் காவேரி அந்த அறைகதவை சாத்திவிட்டு வாய்பொத்தி அழுதாள்.
”பாவி இப்படி ஏமாத்திட்டானே, ஒரு நிமிஷம் அவனை நம்பி அவன்கூட வாழலாம்னு வந்தேனே, இப்படி மோசம் போயிட்டேனே இல்லை இவனை விடக்கூடாது என்னையா ஏமாத்தற, இரு உன்னை ஒருவழியாக்கறேன்” என மனதில் கருவிக் கொண்டாள்
கொம்பனோ தனது திட்டம் பாழாய் போனதை பற்றி கணக்குபிள்ளையிடம் புலம்ப அவனோ காவேரியின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான்
”பரவாயில்லைப்பா காவேரி மகா புத்திசாலி, நான்கூட அவளை குறைவா மதிப்பிட்டேன் இல்லை இல்லை இந்த கொம்பனுக்கே கொம்பனா இருக்காளே சூப்பர்”