”ஆமாம் உன் விருப்பம் எதுவேணும்னாலும் இருக்கலாம் ஆனா, உன்னால தன்னிச்சையா முடிவு எடுக்க முடியாது அகத்தியா”
என சொல்ல உடனே வீரா தன்னிடம் தரப்பட்ட கார் சாவியை மீண்டும் அகத்தியனிடமே நீட்டி
”சின்னய்யா இந்தாங்கய்யா அவங்க சொல்றதும் சரிதானுங்க, எனக்கெல்லாம் இந்த வண்டியை ஓட்டற தகுதியில்லைங்கய்யா” என சொல்ல அதைக் கேட்ட அகத்தியன் நீண்ட பெருமூச்சு விட்டு அந்த கார் சாவியை வாங்க உடனே பழைய டிரைவர் கை நீட்டி அந்த சாவியை பிடுங்க முயல அதைத் தடுத்தான் அகத்தியன்
”என்ன செய்ற நீ”
”சாவியை கொடுங்கய்யா”
”உன்னை நான் வேலையை விட்டு எடுத்தது எடுத்ததுதான், அதுல மாற்றமில்லை” என சொல்ல மீண்டும் கடுப்பானான் பழைய டிரைவர்
சாவியை அங்கமுத்துவிடம் தந்தான் அகத்தியன், அதைக் கண்டு குழம்பிய அங்கமுத்துவோ
”என்னப்பா செய்ற”
”என் விருப்பம் செல்லுப்படியாகாத விசயத்தை நான் வெறுக்கறேன், இந்த கார்ல வர்றதுக்கு எனக்கு தகுதியில்லை, எனக்கான காரை நானே விலைக்கு வாங்கிக்கிறேன், என்னோட காருக்கு டிரைவரா வீராவை நியமிச்சா நான் யாரோட அனுமதியையும் கேட்டு நிக்க வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன் மாமா”
”அகத்தியா நாளுக்கு நாள் நீ நடந்துக்கற விதம் யாருக்குமே பிடிக்கலை, வீட்லயும் எல்லாரும் உனக்கு எதிரா இருக்காங்க, ஏதோ வீட்டுக்கு ஒத்த வாரிசுங்கறதால உன்னை உன் போக்குல விட்டா நீ இஷ்டத்துக்கு ஆடறியா இது தப்பு அகத்தியா” என கொந்தளித்த அங்கமுத்துவை கோபத்துடன் முறைத்த அகத்தியனோ