(Reading time: 24 - 48 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

சாபகேடு, அவள் வேண்டாம் விரட்டிடு விரட்டிடு” என கத்த அகத்தியன் என்ன செய்வதென தெரியாமல் திக்கு முக்காடிப் போனான். அதே நேரம் நாச்சியா அவ்விடம் வந்தாள்

  

”யாரை விரட்டனும் என்னையா” என கேட்டபடி வர அந்த கம்பீர குரல் கேட்டதும் அகத்தியனும் பொன்முடியும் ஒரே மாதிரி திரும்பி பார்த்து அதிர்ந்தனர்.

  

நாச்சியாவோ பட்டுப்புடவை சரசரக்க தங்க வைர நகைகள் மினுமினுக்க சங்கமேஸ்வரன் வீட்டு மருமகளாகவே மாறிப் போய் நின்றிருந்தாள். அந்த அலங்காரத்தில் ஒரு அந்த வீட்டுக்கே மகாராணி போல இருந்தாள், அவளை அப்படி கண்டதும் அகத்தியனோ

  

”நாச்சியாவா இது ஆளே மாறிட்டாளே ஒரு பேச்சுக்கு நீ எதை நினைச்சும் கலங்காத, இனி இதுதான் உன் வீடு இந்த வீட்டுக்கு இனி நீதான் மருமகள்ன்னு சொன்னேன் சரி உங்க விருப்பப்படியே இருக்கேன்னு சொன்னவ, பாட்டியோட உடை நகை எல்லாம் உடுத்திக்கிட்டு கம்பீரமா வந்து நிக்கறாளே, இதை நான் நினைச்சேப் பார்க்கலை” என மனதில் நினைத்துக் கொண்ட வேளையில் நாச்சியாவைக் கண்ட பொன்முடியோ ஏதோ பேயை கண்டது போல அலறி அடித்துக் கொண்டு அந்த அறையின் ஒரு மூலையில் சென்று பயத்தில் பதுங்கிக் கொண்டார். அவரின் செயல் அகத்தியனுக்கு மட்டும் வித்தியாசமாகவும் கவலையாகவும் இருந்ததே தவிர நாச்சியாவிற்கு அப்படியில்லை அவள் வெகுஇயல்பாக நடந்துக் கொண்டாள்

  

அகத்தியனோ பொன்முடியிடம் வந்து

  

”அப்பா என்னாச்சிப்பா உங்களுக்கு, ஏன் இப்படி பயப்படறீங்க எழுந்து வாங்கப்பா”

  

”இல்லை நான் வரலை அவளை போகச் சொல்லு, போகச் சொல்லு”

  

”அப்பா அவள் என்ன பேயா பிசாசா இப்படி பயப்படறீங்க பாருங்க, எவ்ளோ அழகா அலங்காரம் செய்துக்கிட்டு வந்திருக்கா அப்படியே உங்கம்மாவைப் போல” என்றதும்தான் தாமதம் பொன்முடி சட்டென அடங்கி நாச்சியாவை உற்றுப் பார்த்து அரண்டார்

  

”அவளே தான் இது அவளேதான், இவள் இங்க இருக்க கூடாது, இவள் இருந்தா வீட்டுக்கு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.