“தாத்தாவை பார்க்க வந்தேன் ஆமா அவர் எங்க“
“தெரியலயே நான் வந்து ரொம்ப நேரமிருக்கும், அவர் இந்த பக்கமே வரலையே”
”ரொம்ப நேரமா இங்க பத்திரத்தையா தேடிக்கிட்டு இருந்தீங்க“
”அதுவா அது ம் ம்ம் ஆமாம் முக்கியமான பத்திரம்லயா அதான் தேடிக்கிட்டு இருக்கேன்“
”தாத்தாகிட்ட கேட்டாலே கொடுப்பாரே“
”கொடுப்பாரு எதுக்கு அவருக்கு சிரமத்தை கொடுக்கனும்தான் கேட்கலை சரி சரி எனக்கு வெளிய நிறைய வேலையிருக்கு நான் போறேன்” என அவசரமாக சொல்லிவிட்டு அவர் சென்றுவிட அகத்தியன் குழம்பினான்
”மாமா எதையோ மறைக்கறாரு, உயில் பத்திரம்னு சொல்லிட்டு உடனே வேற பத்திரம்னு மாத்தி பேசறாரு ஆக அந்தப் பத்திரம் இங்க இல்லை உயிலைப் பத்தி மாமாவுக்கு தெரிஞ்சிருக்குன்னா எப்படி ஒருவேளை அப்பா எழுதின தற்கொலை கடிதத்தை பார்த்திருப்பாருன்னு நினைக்கிறேன், பேசாம நாம தாத்தாகிட்டயே கேட்டுக்கலாம் ஆனா அவர் எங்க போனார்ன்னு தெரியலையே தேடலாம்” என நினைத்தபடியே அவரை தேடிச் சென்றான் அகத்தியன்.
மறுபுறம் நாச்சியாவோ சங்கமேஸ்வரனை தேடிக் கொண்டு சென்றாள் அவளுக்கு அங்கு வேலை செய்த வேலையாட்கள் உதவி செய்தார்கள்.
”பெரிய ஐயா உன் அப்பா அம்மாவை மிரட்டிக்கிட்டு இருக்காங்க, போய் பாரும்மா” என ஒரு வேலையாள் சொல்ல உடனே நாச்சியா விரைவாக சென்றாள்.
அங்கு சங்கமேஸ்வரனோ நாச்சியாவின் பெற்றோரை பயமுறுத்திக் கொண்டு இருந்தார்