(Reading time: 23 - 45 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”என் சாவுக்கு யாரும் காரணமில்லை, நானேதான் காரணம், நான் செய்த பாவங்களுக்கு தண்டனையா நானே என் வாழ்க்கையை முடிச்சிக்கிறேன், நான் சாகறப்ப ஒரு முக்கியமான உண்மையை சொல்லனும் அதை சொல்றதை விட அதுக்கு சம்பந்தப்பட்டதைப்பத்தி சொல்றேன், எங்கம்மா ஆண்டாள் நாச்சியா ஒரு உயில் எழுதி வைச்சிருக்காங்க, அந்த உயிலைத் தேடி அதுல இருக்கற உண்மையை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க, அப்பதான் நான் ஏன் தற்கொலை செய்துக்கிட்டேங்கற காரணம் தெரியும்”

  

அவ்வளவுதான் எழுதப்பட்டிருந்தது அதைப் படித்த அகத்தியனுக்கு திக்கென்றது

  

”இது என்ன புதுசா உயில்னு ஒரு விசயத்தை சொல்றாரு அப்பா, புரியலையே இதைபத்தி தாத்தாகிட்ட சொல்லனும், அதுக்கு முன்னாடி நாச்சியா கிட்ட சொல்லலாமா வேணாம், ஏற்கனவே அவள் மேல இங்க இருக்கறவங்க சந்தேகப்படறாங்க, இப்ப நான் போய் இந்த லெட்டரை காட்டினா வம்பாயிடும், நான் தாத்தாகிட்டயே கேட்கறேன் கண்டிப்பா உயில் சம்பந்தப்பட்ட விசயம் அவருக்கு தெரிஞ்சிருக்கலாம்” என நினைத்தபடியே தாத்தாவை தேடிக் கொண்டு அவரின் அறைக்குச் செல்ல அங்கு அங்கமுத்து உயில் பத்திரத்தை தேடிக் கொண்டிருந்தார்

  

”எங்கதான் வைச்சிருப்பாங்கன்னு தெரியலையே ஒரு மணி நேரமா தேடறேன் ஒண்ணுமே கிடைக்கலையே” என புலம்பிக் கொண்டிருந்தவரை நிப்பாட்டினான் அகத்தியன், அவனைக் கண்டதும் அங்கமுத்து பயந்து நடுங்கினார்

  

”மாமா இங்க என்ன செய்றீங்க”

  

”அதுவா உன் தாத்தாவை பார்க்க வந்தேன்”

  

“எதையோ தேடற மாதிரி தெரிஞ்சதே எதை தேடறீங்க”

  

”அதுவா உயில் பத்திரம் இல்லை இல்லை ஒரு பத்திரம் காணலை அதை தேடிக்கிட்டு இருக்கேன் ஆமா நீ என்ன இந்தப் பக்கம்“

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.