(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”இதெல்லாம் ஒரு பிழைப்பா இப்படிகூடவா மனசாட்சி இல்லாம வாழறாங்க, எப்படித்தான் இவங்களுக்கு சாப்பிட முடியுதோ நம்ம வயித்தெரிச்சல் இவங்களை சும்மா விடாது இவங்க நாசமாதான் போவாங்க” என சொல்ல அதற்கு இரு பக்க மக்களும் இந்த ஒருவிசயத்தில் ஒன்றாக இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்த நாச்சியா

  

”நான் உங்கள்ல ஒருத்தியா வாழ்ந்தவ, உங்களாலதானே நான் அவமானப்பட்டேன் அதனாலதானே எனக்கு திருமதி அகத்தியன்ங்கற அடையாளம் வந்தது கூட என்னால இல்லையே சொல்லப்போனா, நான் எந்த தப்பும் செய்யலை, தப்பானவங்க ஒவ்வொருத்தரா தங்களோட தப்பை நினைச்சி குற்ற உணர்ச்சியில தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாங்க, செத்தவங்களை விட்டுட்டு உங்களுக்காக ஆதரவா பேச வந்த என்னை எதுக்காக திட்டறீங்க” என கேட்க அதற்கு மக்களிடம் பதில் இல்லை சலசலப்பு மட்டுமே இருந்தது, அதிலும் மக்களிடையே கார்கோடகன் இருந்தான் அவன் தைரியமாக முன்னால் வந்து அவளிடம் பேசினான்

  

”இப்ப எதுக்காக எங்களை பார்க்கவந்த, இன்னும் எத்தனை பேர் உயிரோட இருக்காங்க, எத்தனை பேர் செத்தாங்கன்னு கணக்கு வழக்கு பார்க்கவந்தியோ“

  

”செத்தவங்களை பத்தி பேசி பிரயோசனம் இல்லை இந்த ஊர் ஒண்ணாகனும் அதுதான் என் ஆசையே”

  

”எதுக்கு ஒண்ணாக்கப் பார்க்கற, அதுல உனக்கென்ன லாபம் வருது, இப்படி ஊரு ஒண்ணானா சொத்து கிடைக்கும்னு சொன்னாங்களா, அதுக்குதான் ஈன்னு இளிச்சிக்கிட்டு வந்திருக்கியா”

  

”சொத்துக்கு ஆசைப்படறவ இந்த நாச்சியா இல்லை அது என்னைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு தெரியும், தெரியாத உங்களை போல ஆட்கள் கிட்ட பேசறதுல அர்த்தம் இல்லை இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டுப் போக வந்தேன்”

  

”என்ன சொல்லு பார்க்கலாம், நீ என்ன புதுசா பொய் கதை கட்டறேன்னு” என நக்கலாக கார்கோடகன் பேச நாச்சியா துணிச்சலாக

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.