(Reading time: 22 - 43 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”ஒரு காலத்தில நான் போராளியா இருந்தேன், கீழவீதி மேலவீதின்னு பிரிஞ்சிக்கிடந்த இந்த ஊரை ஒண்ணாக்கனும்னு ஆவுடையப்பனுக்கு எதிரா நான் புரட்சி செய்தேன், அந்தச் சமயம் ஆண்டாள் நாச்சியார் எனக்கு உதவி செய்தாங்க, இந்த ஊர் ஒண்ணாகனும்னா அதுக்கு கல்யாணம்தான் சரியான வழின்னு சொன்னாங்க, அதுக்கு நானும் சம்மதிச்சேன், ஆவுடையப்பனும் சம்மதிச்சாரு ஆனா, என் கூட்டாளிகள் எதிர்த்தாங்க, அதனால அவங்களை நான் கொன்னு புளியமரத்துக்கு அடியில புதைச்சிட்டேன், அதுக்கு அப்புறம் நான் ஆண்டாளை கல்யாணம் செய்துக்கிட்டேன், பல வருஷங்களா எங்களுக்கு குழந்தையில்லை, ஆண்டாள் கோவில் கோவிலா ஏறி இறங்கி கர்ப்பமானா ஆனா அவளுக்கு பெண்குழந்தைத்தான் பிறந்தது, சொத்தெல்லாம் ஆண்வாரிசுக்குதான் போகனும்னு ஆவுடையப்பன் உயில் எழுதியிருந்த காரணத்தால இந்த பெண் குழந்தையை பத்தி வெளிய சொல்லாம அதையும் உசுரோடவே மண்ல புதைச்சிட்டேன், இந்த வீட்ல வேலை செய்த பொண்ணுக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது, அந்த தொடர்புல பிறந்த ஒரு ஆண் பிள்ளையை ஆண்டாளுக்கு பிறந்ததா சொல்லி எல்லாரையும் நம்ப வைச்சேன், அதுக்கு அந்த வேலைக்கார பொண்ணு தகராறு செய்யக்கூடாதுன்னு அவளையும் கொன்னு மண்ல புதைச்சிட்டேன்

  

பொன்முடி எனக்கு பிறந்த மகன் ஆனா, ஆண்டாளோட மகன் இல்லை இந்த விசயம் தெரிஞ்சதும் பொன்முடி தற்கொலை செய்துக்கிட்டு இறந்துட்டான். இது எல்லாத்துக்கும் காரணம் நான்தான், என்னோட பேராசை புத்திதான் காரணம், இந்த ஊரையே நான் ஆளனும்னு ஆசைப்பட்டேன், இந்த சொத்துக்களை எல்லாம் நான் அனுபவிக்கனும்னு நினைச்சேன், அதனால பல தப்புக்களை செய்தேன், இதனால நிம்மதியில்லாம இத்தனை வருஷமும் நான் ரொம்ப பாடுபட்டுட்டேன், இனியும் என்னால கஷ்டப்பட முடியாது நான் செய்த தப்புக்களுக்கு தண்டனை கொடுங்க அப்பதான் என்னால நிம்மதியா வாழமுடியும்” என சொல்லி முடிக்க அனைவருமே அதிர்ந்தார்கள்.

  

பொன்முடியை பற்றின உண்மை வெளியே வரவும் அனைவருமே அரண்டார்கள். கலாவதியோ

  

”அப்போ நான் அண்ணனா நினைச்சது என் கூடபிறந்த அண்ணன் இல்லையா சே நீயெல்லாம் ஒரு மனுஷனா சொத்துக்காக இப்படியா நடந்துக்குவ, இத்தனை நாளா நான் என்னை மேல்வீதியைச் சார்ந்தவள்ன்னு உயர்வா நினைச்சேன் ஆனா நீ கீழவீதியாளுன்னு எனக்கு தெரியாம போயிடுச்சி” என புலம்ப அங்கமுத்துவோ காவல் அதிகாரியிடம்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.