”என்னடா இப்படி சலிச்சிக்கற, அவள்தான் வேணும்னு அடம்பிடிச்சி போன, இப்ப இப்படி பேசற“
”ஆமாம் அப்ப அவள் வேணும்னு ஓடினேன், இப்ப அவளை நினைச்சாலே பயமா இருக்கு, அதான் இங்க வந்துட்டேன்“
”அப்போ அவள்கூட வாழ்ந்த வாழ்க்கை”
”நான் எங்க அவள்கூட வாழ்ந்தேன்“
”என்னடா இப்படி பேசற, எனக்கு பயமாயிருக்கு, உண்மையைச் சொல்லு என்னாச்சி உனக்கு”
”சொல்ல ஒண்ணுமில்லைம்மா எனக்கும் அவளுக்கும் செட்டாகலை அவ்ளோதான்”
”செட்டாகலைன்னா அப்போ டைவர்ஸ் பண்ணிடப் போறியா” என அவனின் தந்தை கேட்க அதற்கு அவனோ
”அய்யோ அதெல்லாம் இல்லைப்பா இப்பதானே நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு இருக்கோம், அதுக்குள்ள எதுக்கு பிரியனும்”
”செட்டாகலைன்னு சொன்னியே“
”ஆமாம் சில விசயங்கள்ல எனக்கும் அவளுக்கும் ஒத்துப் போகலை, போக போக எல்லாம் சரியாயிடும்பா”
”அவள்கூட நீ தங்கறது எங்களுக்கு சரியா படலை, நீ அவளை அடக்கனும், அதை விட்டுட்டு நீ அவளுக்காக அடங்கிப் போறியே”
”இப்ப அடங்கிப் போறது பின்னாடி அவளை அடக்கத்தானே அப்பா“