”2 நாளா”
”ஏன் என் ஞாபகமா இருக்கியா”
”உங்களுக்கு கோர்ட்ல இருந்து சம்மன் வந்திருக்கு, அதை சொல்லத்தான் போன் பண்ணேன்“
”எது சம்மனா எதுக்கு“
”ம் பவானியோட தற்கொலை கேஸ் விசயமா உங்களை கோர்ட்டுக்கு வர சொல்லியிருக்காங்க”
”அது எப்படி அங்க வந்திச்சி“
”என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும், சரி நான் போன் வைக்கிறேன்” என பட்டென போன் கட்செய்துவிட்டாள் ஹரிணி.
தருணோ அதிர்ந்தான்
”அப்பா அம்மா கோர்ட்ல இருந்து சம்மன் வந்திருக்காம்”
”சம்மனா அது ஏன் அங்க போச்சி, இங்கதானே வந்திருக்கனும்“
”அதான் எனக்கும் புரியலை“
”உனக்கு கல்யாணம் ஆகி நீ அங்க இருக்கற விசயம் வக்கீலுக்கு தெரியும் அவர் செய்த வேலை போல இது”
”ஆஆஆ நானா சொல்ல வேண்டிய விசயத்தை இப்படி உடைச்சி பேசற அளவுக்கு ஆயிடுச்சே, இனி வேற வழியே இல்லை நான் ஹரிணிகிட்ட இதை பத்தி நாளைக்கே பேசிட போறேன்”