”அதை விட நீ அவளை கூட்டிட்டு இங்க வந்துடு நாங்க அவளை சரியாக்கறோம்”
”வேற வினையே வேணாம், அவள் இங்க வந்தா, நீங்க அவளை நடத்துறதே வேற மாதிரியிருக்கும்”
”நாங்க என்னடா செய்யப் போறோம் அவளை”
”நீங்கத்தானே, நிவேதினியை வைச்சி செஞ்சீங்களே, மறந்துட்டீங்களா எனக்காக வந்தவளை வேலை வாங்கி கஷ்டப்படுத்தி கொடுமைபடுத்தினீங்களே, அவள் சாவுக்கு முக்கால்வாசி காரணமே நீங்கதான்”
”இதப்பாருடா அவள் பணக்காரின்னு திமிரா நடந்துக்கிட்டா, அவள் திமிரை நான் அடக்கினேன், இது தப்பா” என தருணின் தாயார் சொல்ல அதற்கு தருண்
”சரி அதை விடு பவானி என்ன செய்தா உனக்கு, அவளை ஏன்மா கஷ்டப்படுத்தின”
”யாரு நானாடா“
”ஆமாம் நீ பார்த்த பொண்ணுதானே, அவளை நீ எப்படி பார்த்துக்கனும், நல்லபடியா பார்த்திருக்கனும்ல அதை விட்டுட்டு உன்னோட அதிகாரத்தை அவள்மேல காட்டின, அவள் பாவம் தெரியுமா“
”டேய் நிறுத்துடா இன்னுமா செத்தவளை நினைச்சிக்கிட்டு இருக்க, பவானியை நீ மறந்தாதான் உன்னால ஹரிணியோட வாழ முடியும், உனக்கும் அவளுக்கும் செட்டாகாம போனதுக்கு பவானியும் ஒரு காரணமா இருக்கும்”
”சரியா சொன்னீங்கப்பா ஹரிணியை நான் கல்யாணம் செய்துக்கிட்ட நாள்ல இருந்து பவானியோட நினைப்பு என்னை விட்டுப் போகலை”