”அதுக்கு காரணம் நான்தான் அதை பத்தி இப்ப எதுக்கு விடு”
”என்னடா நீ, அப்போ அவள் சம்பாதிக்கறதுலதான் நீ உட்கார்ந்து சாப்பிடறியா, இப்படி இருந்தா அவள் எங்க உன்னை மதிக்கப் போறா”
”எல்லாம் அவளுக்கு என் மேல மதிப்பு இருக்கு, கூடவே சின்ன சின்ன வெறுப்பும் இருக்கு, அவளோட வெறுப்புகள் மறைஞ்சிட்டா போதும், எங்க வாழ்க்கை சொர்க்கமாயிடும்“
”சரி இந்த கேஸ் பத்தி அவள்கிட்ட பேசிடு”
”பேசறேன் எப்படி பேசினா அவள் வழிக்கு வருவாள்ன்னு பார்த்துதான் பேசனும், அதுவரைக்கும் நான் இங்க இருக்கேன், எப்ப அவளுக்கு என் நினைப்பு வந்து என்னை கூப்பிடறாளோ அப்ப அவள்கிட்ட போறேன், நானா போனா இளப்பமா நினைப்பா அவளே கூப்பிட்டாதான் நான் சொல்றது அவள் காதுல விழும்” என சொல்லி முடிக்கவும் அவனின் செல்போன் அலறவும் சரியாக இருந்தது, ஹரிணிதான் உடனே ஆன் செய்யாமல் போக்கு காட்டினான் தருண்.
ஹரிணியும் விடாமல் முயற்சி செய்தாள் 10 முறை முயற்சி செய்தபிறகு தருணோ
”வாடி வா வந்தியா என் வழிக்கு, இதைதான் நான் எதிர்பார்த்தேன் இரு எப்படி உன்னை மடக்கிறேன் பாரு” என சொல்லிக் கொண்டே போன் ஆன் செய்ய மறுபக்கம் ஹரிணியோ
”தருண் உனக்கு எத்தனை முறை போன் பண்றது, என்னதான் செய்ற”
”ப்ச் இப்ப எதுக்கு கத்தற, வீட்ல அப்பா அம்மாகூட பேசிக்கிட்டு இருக்கேன்”
”சரி எப்ப வீட்டுக்கு வர்ற”
”என்ன அவசரம் இன்னும் 2 நாள் இருந்துட்டு வரேன்“