”எதுக்கு வக்கீல் என்ன விசயம்”
“அதான் பவானியோட விசயம், இந்த கேஸ்ல இருந்து எப்படியாவது உங்களை நான் காப்பாத்தனும் இல்லைன்னா பவானியோட தற்கொலைக்கு நீங்கதான் காரணம்னு சொல்லி உங்களுக்கு தண்டனை தந்துடுவாங்க, அப்படி நடக்க நான் விடமாட்டேன்” என உறுதியாகச் சொல்ல தருணுக்கு நிம்மதியாகிப் போனது அவனே இதைப்பற்றி பேசதான் வந்தான், எப்படியாவது ஹரிணியிடம் பேசி கெஞ்சி தன் பக்கம் பேச வைக்க வேண்டும் என நினைத்தான் ஆனால் அது தானாக நடக்கப் போவதை அறிந்து நிம்மதியானான்.
சிறிது நேரத்தில் வக்கீலும் வந்தார், அவரிடம் கேஸ் பற்றி அனைத்தும் ஹரிணியும் தருணும் சொன்னார்கள், தருண் அக்மார்க் நல்லவன் போலவே தன்னைக்காட்டிக் கொண்ட விதம் ஹரிணிக்கு எரிச்சலைத் தந்தது ஆனாலும் பொறுத்துக் கொண்டாள் வக்கீலோ அனைத்தும் கேட்டுவிட்டு ஹரிணியிடம்
”வேறவழியே இல்லை இதுல நீங்கதான் இறங்கனும்“
”நானா நான் என்ன செய்யனும் சொல்லுங்க, தருணை காப்பாத்த நான் என் உயிரையும் தருவேன்” என சொல்ல அதில் உச்சி குளிர்ந்தான் தருண்
”சிம்பிள் கோர்ட்ல நீங்க ஆஜராகி தருணோட நீங்க வாழற வாழ்க்கையை பத்தி சொல்லனும்”
”எதுக்கு இதெல்லாம் சொல்லனும்”
”ஆமாம் தருணும் பவானியும் ஒண்ணா வாழ்ந்த வாழ்க்கையில ஏதோ பிரச்சனையாகி அதன் காரணமா பவானி தற்கொலை செய்திருக்கலாம்னு சந்தேகம் எழுப்பியிருக்காங்க, அது பொய்யுன்னு நிரூபிக்கனும் அதுக்கு உங்களாலதான் முடியும்“
”நான் என்ன சொல்லனும்”
”நீங்களும் தருணும் சந்தோஷமா வாழறீங்க, உங்களை அவர் அன்பா பார்த்துக்கறாரு, அப்படி