”என்னடா சொல்ற”
”ஆமாம்பா ஹரிணி செய்ற செயல்கள்ல எனக்கு பவானியோட நினைப்புதான் வருது, நேத்து கூட” என சொல்ல வந்து நிறுத்தினான்
”என்னடா சொல்லு எதையோ சொல்ல வந்து நிப்பாட்டற”
”அதை விடும்மா பவானி என் வாழ்க்கையில வந்தப்ப நிவேதினியை என்னால மறக்க முடியாம கஷ்டப்பட்டேன், இப்ப ஹரிணி என் வாழ்க்கையில வந்தப்ப பவானியை மறக்க முடியாம கஷ்டப்படறேன், ப்ச் வாழ்க்கையே கசப்பா இருக்கு”
”முதல்ல பவானியை மறந்துட்டு ஹரிணியோட வாழற வழியைப் பாரு”
”முயற்சி செய்றேன் என்னால முடியலை, ஏதோ ஒரு விசயத்தில எனக்கு பவானியோட நினைப்பு வர்ற மாதிரியே அந்த ஹரிணி நடந்துக்கறா”
”கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும், அப்புறம் நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன், ரொம்ப முக்கியமான விசயம்“
”என்னதுப்பா“
”பவானியோட கேஸ் கோர்ட்டுக்கு வரப்போகுது நீ ஆஜராகனும்”
”ஓ அதுவேற இருக்கா, சே இவள் பாட்டுக்கு ரயில்ல விழுந்து செத்துட்டா ஆனா, எனக்குத்தான் கஷ்டம் வந்து ஒட்டிக்கிச்சி, அவள் இறந்ததுக்கு நான்தான் காரணமா இருக்கலாம்னு சந்தேகப்படறாங்க, எப்படித்தான் இந்த கேஸ்ல இருந்து நான் தப்பிப்பேனோ தெரியலை”
”எனக்கு ஒரு யோசனை சொல்லவா“