”என்னப்பா அது“
”ஒண்ணுமில்லை இப்ப ஹரிணி உன் வாழ்க்கையில வந்துட்டா, அவளை இந்த கேஸ்க்கு உதவி செய்ய சொன்னா என்ன“
”உதவியா அவளையா எதுக்குப்பா அவளை இதுல இழுக்கனும், பெரிய பிரச்சனையாயிட போகுது”
”இல்லைடா பவானியோட மரணத்துக்கு உன்னை சந்தேகப்படறாங்கள்ல அது பொய், நீ நல்லவன்னு ஹரிணி சொன்னாள்ன்னு வையேன் இந்த கேஸ் முடிஞ்சிடும்னு வக்கீல் சொன்னாப்ல“
”ம் நல்லாதான் இருக்கு ஆனா, இதுக்கு ஹரிணி ஒத்துக்கனுமே”
”அவள்கிட்ட பேசு தருண், உனக்காக அவள் இதைகூட செய்ய மாட்டாளா“
”செய்வாளா செய்யமாட்டாளாங்கறது அப்புறம், அவள்கிட்ட எப்படி பேசறது அதான் குழப்பமா இருக்கு“
”இதுல குழம்ப என்ன இருக்கு புருஷனை காப்பாத்த ஒரு மனைவி என்ன வேணும்னாலும் செய்வா“
”அதெல்லாம் ஹரிணிக்கிட்ட செல்லாது, அவள் நேர்மையானவ, தப்பு செய்த புருஷனை வேலையை விட்டு எடுத்து தண்டனை தர்றா”
”என்னது வேலையைவிட்டுட்டியா”
”நானா விடலை என்னை வேலையை விட்டு எடுத்துட்டா”
”ஏன் என்ன காரணம்“