இப்படின்னு நாலு வார்த்தை நல்லவிதமா சொன்னா போதும் தருண் மேல இருக்கற சந்தேகம் போயிடும், அப்புறம் தானாவே பவானியோட மரணம் தற்கொலை இல்லை ரயில்ல தவறி விழுந்ததால ஏற்பட்ட மரணம்னு மாத்திடலாம்”
”ஓ அப்படியா சரி அப்படியே செய்துடலாம், பவானி பாவம்தான் அவள் தடுமாறி ரயில்ல விழுந்து இறந்ததுக்கு தருண் எப்படி காரணமாவான், தருணும் பாவம்தானே, இன்னிக்கு வரைக்கும் அவர் பவானியை மறக்கலை அவளோட நினைவுல வாழறாரு, அவ்ளோ காதல் இருக்கு, அப்பேர்பட்டவரை எப்படி சந்தேகிக்க முடியும்“
”சரி எதுவாயிருந்தாலும் கோர்ட்ல பேசறப்ப ஜாக்கிரதையா பேசனும் இல்லைன்னா எல்லாரும் மாட்டுவோம்“
”இல்லை அப்படி ஏதும் நடக்காது நான் பார்த்துக்கறேன்” என ஹரிணி உறுதியாகச் சொன்னதும் தருண் குதூகலமானான்.
அடுத்த நாளே கோர்ட்டில் அனைவரும் கூடினார்கள். வக்கீல் சொன்னது போல தருண் நினைத்தது போலவே ஹரிணியோ தருணைப் பற்றி உயர்வாக பேசினாள், அதில் அவன் மீதான சந்தேகம் நீங்கியது. அவனை குற்றமற்றவன் என தீர்ப்பளித்தார்கள், பவானிக்கு நடந்தது முழுக்க முழுக்க விபத்துதான் என வழக்கை முடித்தார்கள். அதோடு தருணும் பெரிய பாரத்தை இறக்கி வைத்தான். ஹரிணியிடம் நன்றி கூற அவளோ
”நன்றியெல்லாம் எதுக்கு தருண், நான் உன்னோட மனைவி, உன்னைக் காப்பாத்தறது என்னோட கடமை, எது எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, இனி இந்த கேஸ்க்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை”
”இது போதும் ஹரிணி இப்பதான் நிம்மதியா இருக்கு“
“இந்த கேஸாலதானே நீங்க பவானியை நினைச்சிக்கிட்டு இருக்கீங்க, இனிமேல அவளோட நினைப்பு உங்களுக்கு வராதுல்ல”
”கண்டிப்பா வராது ப்ராமிஸ்”