”ஆனா ஹரிணிக்கு அந்த இறப்புல சந்தேகம் இருக்கு, அதனால அவங்க கேஸ் தந்தாங்க”
”சந்தேகமா என்ன சந்தேகம்“
”யாரோ வேணும்னே இளங்கோவை பழிவாங்க அவனுடைய வண்டி மீது ஏத்தி கொன்னுட்டு அதை சாலை விபத்தா மாத்திட்டாங்கன்னு நினைக்கறாங்க” என சொல்ல கதிகலங்கிப் போனான் தருண்
”ஹரிணியோட சந்தேகத்துக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா”
என தருண் கேட்க
“ஆதாரம் இல்லாத காரணத்தாலதான் இந்த கேஸ் நிக்கலை, இனிமேலயும் இந்த வழக்கை நடத்தறது வேஸ்ட், இந்த வழக்கை வாபஸ் வாங்கி்க்க சொல்லனும்னு வந்தேன்”
”ஓ அப்படியா சூப்பர் சூப்பர் அதுக்கென்ன நான் அவள்கிட்ட பேசிடறேன், நீங்க கிளம்புங்க கண்டிப்பா ஹரிணி இந்த கேஸை வாபஸ் வாங்கிடுவா”
”எதை வைச்சி இவ்ளோ உறுதியா சொல்றீங்க“
”அவளே இளங்கோவை மறந்துட்டு என்கூட புது வாழ்க்கை வாழ தொடங்கிட்டா, இனியும் அவள் இளங்கோவுக்காக கேஸ் நடத்துவாளா இல்லை என்னோட வாழ்வாளா, நான் சொன்னா அவள் என் பேச்சை தட்டமாட்டா, நான் அவள்கிட்ட பேசிக்கிறேன், நீங்க போங்க” என அவரை அனுப்பிவிட்டு பலமாக யோசிக்கலானான்.
மாலை நேரம் ஆபிஸ் விட்டு வீடு திரும்பினாள் ஹரிணி. அவளுக்கு வக்கீல் ஏற்கனவே தகவல் தந்தமையால் எதுவும் அறியாத பெண் போல வந்திருந்தவளிடம் வக்கீல் சொன்ன விசயத்தை அப்படியே சொல்லி வைத்தான் தருண்