“எதுவாயிருந்தாலும் சீக்கிரமா பேசி ஒரு முடிவுக்கு வா, அவளையும் மறக்காம கோர்ட்டுக்கு கூட்டிட்டு வா” என சொல்ல அவனோ சரிசரியென தலையாட்டினான்
மறுபக்கம் ஹரிணியோ வீட்டில் கோர்ட்டில் இருந்து வந்த சம்மனை கையில் வைத்திருந்தாள்
”என்ன செய்யலாம் பவானிக்கு நியாயம் வேணும், அதுக்கு தருண் மாட்டிக்கனும், அவனை எப்படி சிக்க வைக்கறது இப்படியொரு கேஸ் இருக்கற விசயம் எனக்குத் தெரியாம போயிடுச்சி, தெரிஞ்சிருந்தா பவானி எழுதின டைரியை நாம எரிக்காம இருந்திருக்கலாம், இப்ப நாம அவளை பத்தி சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க, கோர்ட்டுக்கு தேவை ஆதாரங்கள்தான் அதை திரட்டறது கஷ்டம் சே இப்படி ஆயிடுச்சே இனி என்ன செய்றது” என பலமாக யோசிக்கலானாள்.
சில மணி நேரம் கழிந்தது
”பரவாயில்லை ஆதாரங்கள் இருந்து அவனை மாட்டிவிட்டாலும் மிஞ்சிப் போனா எத்தனை வருஷம் அவன் ஜெயில்ல இருப்பான், சீக்கிரமா வந்துடுவான் அவனோட தப்பை அவன் உணரமாட்டான், குற்ற உணர்ச்சியே இல்லாம வாழ பழகிட்டவனுக்கு தண்டனை வாங்கித்தர்றது வேஸ்ட், அவனை இப்படியே பழிவாங்கனும், ஒவ்வொரு நொடியும் அவன் பயந்து பயந்து சாகனும், பவானிக்கான நியாயத்தை கோர்ட்டால எப்பவுமே வழங்கமுடியாது, நாமதான் வழங்கனும், அதுவும் சரிதான் வரட்டும் இந்த கேஸ்ல இருந்து அவனை காப்பாத்திடலாம், அதுக்கு என்ன செய்றது நம்ம வக்கீல்கிட்ட இதை பத்தி பேசி பார்க்கலாம்” என முடிவு எடுத்தாள்
மறுநாள் காலையில் தருண் ஹரிணியின் வீட்டுக்கு வர அவளோ அவனுக்காகவே காத்திருந்தாள்
”தருண் நீங்க வந்தது நல்லதாப் போச்சி, இப்பதான் வக்கீலை வரச் சொல்லியிருக்கேன், அவர் வரட்டும் எங்கயும் போகாதீங்க நானும் இன்னிக்கு லீவுதான்“