நொந்தபடியே தானும் அழகாக ரெடியாகி அவன் முன் வந்து நின்றாள் ஹரிணி.
பட்டுப்புடவை சரசரக்க தங்க நகைகள் மினுமினுக்க முகத்தில் வெட்கப்புன்னகையுடன் கையில் பால் டம்ளருடன் வந்தவளைக் கண்டு சொக்கிப் போனான் தருண்
”ஹரிணி நீ அப்படியே தேவதை போல இருக்க”
”சே எப்பவுமே இப்படித்தான் சொல்வீங்களா“
”வேற தகுதியான வார்த்தை எனக்கு கிடைக்கலையே, என்ன செய்றது வாவ்வ் உன் அழகு என்னை கொல்லுது, நீ ரெடியாகிட்டு வந்துட்ட இரு நான் போய் ரெடியாயிட்டு வரேன்” என சொல்லி அவசரமாக ரெடியாகச் சென்றான் தருண்
”எப்படியாச்சும் இவன்கிட்டயிருந்து தப்பிக்கனுமே, என்ன செய்யலாம், ஏது செய்யலாம்” என ஹரிணி பலமாக யோசித்துக் கொண்டிருந்தாள்
சில நிமிடத்தில் பக்காவாக ரெடியாகி வந்தான் தருண். அவனைக் கண்டதும் ஹரிணிக்கு திக்கென்றது
”ஆஹா இவன் வர்ற வேகத்தைப்பார்த்தா இன்னிக்கு என் கதி அதோ கதிதான் போல இருக்கே என்ன செய்யலாம்” என நினைக்க அவனோ முன்பு போல அவளிடம் வேகத்தை காட்டாமல் பொறுமையாக அவளின் விருப்பத்திற்காக சம்மதத்திற்காக காத்திருப்பவன் போலவே நடந்துக் கொண்டான் அதுவே அவளுக்கு கொடுமையாக இருந்தது
”ஹரிணி நான் எப்படியிருக்கேன், ஹீரோ போல இருக்கேனா” என கேட்க ஏனோ அவள் கண்களுக்கு அவன் வில்லனை போலதான் தெரிந்தான் ஆனாலும் பொய்யாக அவனிடம்
”ஆமாம் தருண் பேசாம நீங்க சினிமாக்கு போகலாம் நல்லாவே நடிக்கறீங்க”
”என்னது“