Page 18 of 21
”அதெப்படி வரும் தப்பாச்சே”
”இல்லை தருண் இதுக்கு முன்னாடி இளங்கோதான் இது போல முத்தம் தருவான், எனக்கே தெரியாம அந்த நினைப்பு வந்திருக்கும் போல அதான் உளறிட்டேன் சாரி தருண், இனி இளங்கோ பேர் வராது சாரி” என சொல்ல தருணும் ஓரளவு தன்னை சமாதானம் செய்துக் கொண்டு
”சரி பரவாயில்லை நாம ஆரம்பிக்கலாமா”
”ம்ம்” என்றாள் வெட்கத்துடன் மறுபடியும் அவனுக்குள் உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது இம்முறை அவள்
”பாட்டு பாடவா”
”என்னது”
”பாட்டு“
”இப்ப பாட்டு தேவையா“
”என்னவோ தெரியலை பாடனும்னு தோணுது பாடவா அதை கேட்டா இன்னும் உங்களுக்கு இதமா இருக்கும்“
”ம்க்கும் சரி பாடு” என சொல்ல அவளும் பாடினாள்
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா