(Reading time: 21 - 42 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”நல்லா நடிப்பீங்கன்னு சொன்னேன், ஹீரோவுக்கு உண்டான அத்தனை அம்சமும் உங்ககிட்ட இருக்கு“

   

”தாங்க்ஸ் ஹரிணி நான் ஹீரோவா உனக்கு மட்டும் இருந்தா போதும், மத்தவங்களுக்கு இருக்கனும்னு அவசியம் இல்லை” என சொல்லிக் கொண்டே அவளின் பக்கம் நெருங்கி அமர்ந்தான்.

   

”இந்த புடவையில நீ ரொம்ப அழகா இருக்க” என சொல்லிக் கொண்டே அவளின் தோளில் கையை வைத்து தேய்க்க அவளுக்கு உடலே பற்றி எரிந்தது, பிடிக்கவில்லை அவனது அந்த தொடுதல் சுத்தமாக பிடிக்கவில்லை, தன் வெறுப்பை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாதென கண்கள் மூடினாள், அவள் கண்கள் மூடவும் தருணுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவள் கூச்சப்படுகிறாள் வெட்கப்படுகிறாள் என நினைத்து அவளிடம் அத்து மீறலானான், மெல்ல அவளை படுக்கையில் படுக்க வைத்தான், கண்களாலேயே அவளையும் அவளது உடலையும் மேய்ந்தான். அவனுள் வெறி ஏறியது. அப்படியே அவளின் கன்னத்தில் முத்தம் பதிக்க அடுத்த நொடி

   

”சீய் போ இளங்கோ நீ மோசம்” என சொன்னாளே பார்க்கலாம் அவ்வளவுதான் தருணுக்குள் எழுந்த அத்தனை உணர்ச்சிகளும் காணாமல் போய்விட்டது. அவளை விட்டு விலகினான் அவளையும் உலுக்கி எழுப்பினான்

   

”என்னாச்சி” என அவள் அப்பாவியாக கேட்க

   

”எதுக்கு இப்போ இளங்கோன்னு சொன்ன”

   

”நானா சொன்னேன்“

   

”நீதான் சொன்ன நான் உனக்கு முத்தம் கொடுத்ததும் இளங்கோன்னு சொன்னியே“

   

”ஓ அப்படியா சாரி தருண் தெரியாம வாய்ல வந்திருக்கும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.