”சாரி சாரி நான் யதார்த்தமா சொன்னேன், கோச்சிக்காத ஹரிணி ப்ளீஸ் புரிஞ்சிக்க, யார்னே தெரியாத ஒருத்தனுக்கு தண்டனை கொடுக்கனும்ங்கறதுக்காக நீ இப்படி உன் வாழ்க்கையை அழிச்சிக்கலாமா இளங்கோவுக்கு நடந்தது விபத்துதான்”
”சரி அது விபத்தாவே இருக்கலாம், அட்லீஸ்ட் இளங்கோ வண்டியை தாக்கின அந்த வண்டிக்காரனை நான் பார்க்கனும்”
என சொல்ல திடுக்கிட்டான் தருண்
”எதுக்கு அவனை பார்த்து நீ என்ன செய்யப் போற“
”நியாயம் கேட்கப் போறேன், ஏன்டா இப்படி இளங்கோவை கொன்னேன்னு கேட்பேன்”
”இதப்பாரு ஹரிணி இது முட்டாள்தனம், தெரியாம நடந்த விபத்து அப்படியே நீ நியாயம் கேட்கறேன்னு வைச்சிக்கிட்டாலும் அவன் என்ன சொல்வான்னு நினைக்கற, மன்னிப்பு கேட்பான், தெரியாம செய்துட்டேன்னு கைகூப்பி மன்னிப்பு கேட்பான் அவ்ளோதானே” என சொல்ல அவளுக்கு உள்ளுக்குள் ஆத்திரமாக இருந்தது ஆனாலும் பொறுத்துக் கொண்டு
”இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்றீங்க“
”இந்த கேஸை விட்டுடு அதான் நமக்கு நல்லது, நம்ம வாழ்க்கைக்கு நல்லது, இதையே நினைச்சிக்கிட்டு இருந்தா நம்மால சந்தோஷமா வாழமுடியாது ப்ளீஸ் எனக்காக ப்ளீஸ்”
என கெஞ்ச அவளும் யோசித்தாள்
”வக்கீல் சொன்னது போல இந்த கேஸ் நிக்காது, தருண்தான் தப்பு செய்தான்னு நாம கோர்ட்டுல சொன்னாலும் தருணே தன்னைக் காப்பாத்திக்க ஆயிரம் பொய் சொல்லி தப்பிச்சிடுவான், சரியான கிரிமினல் புத்திக்காரன், எப்படியும் இவனை பவானிக்காக தண்டிக்க வேண்டியிருக்கு, கூடவே இளங்கோவுக்காகவும் இவனை தண்டிச்சிடலாம் வீணா இவனை கோர்ட்ல நிப்பாட்டி தண்டனை வாங்கித்தந்தாலும் கொஞ்ச நாள்ல வெளிய வந்துடுவான்,