”ஹரிணி போதும் நாம வாழற வழியை பார்க்கலாம், பவானியோட கேஸ் முடிஞ்சது, இப்ப எல்லாம் எனக்கு அவள் நினைப்பே வர்றதில்லை, அதே போல நீயும் இளங்கோவை மறக்கனும்னா நீ போட்ட கேஸை வாபஸ் வாங்கிடு, நாம நிம்மதியா வாழலாம்”
”அதெப்படி தருண் இளங்கோ கேசை அப்படியே விடமுடியும், பவானிக்கு நடந்தது விபத்து ஆனா, இளங்கோ அப்படியில்லை அவனை யாரோ வேணும்னே கொலை செய்ய முயற்சி செய்திருக்காங்க, அவங்க மட்டும் என் கையில கிடைச்சா போதும் அவனை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன்” என உக்கிரமாக பேச தருணுக்கு திக்கென்றது
”ஏய் என்ன இப்படி பேசற, ஜெயிலுக்கு போறதுக்கா நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்டா”
”அதுக்காக இளங்கோவுக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் வழங்க வேணாமா“
“இளங்கோவோட இறப்பு சாலை விபத்துன்னு எல்லாரும் சொல்லியாச்சி, இனி உன்னால எதையும் செய்ய முடியாது, எதை நீ ஆதாரமா கொண்டு வருவ, நீ சொல்ற மாதிரி எவனோ ஒருத்தன் இளங்கோவை கொன்னதாவே வைச்சிக்கலாம், அவன் யார்ன்னு எப்படி கண்டுபிடிக்கறது, இந்த கேஸ் நடத்தறது வேஸ்ட்ன்னு வக்கீலும் சொல்லிட்டாரு, இதை விட்டுடலாம் ஹரிணி”
”என்னால முடியாது தப்பு செய்தவனுக்கு தண்டனை தந்தே ஆகனும்”
”தண்டனை தந்துட்டா மட்டும் இளங்கோ என்ன திரும்பி வந்துடப் போறானா சொல்லு”
”வரமாட்டான்தான் ஆனாலும் எனக்கு நிம்மதியாவது இருக்குமே, இளங்கோவோட ஆத்மாவும் சாந்தியாகுமே”
”இன்னுமா அவன் ஆத்மா சாந்தியாகாம இருக்கு” என இளப்பமாக சொன்னவனிடம்
”தருண்” என கோபத்தில் கத்தினாள்