செய்றதுன்னு அன்னியிலிருந்து நான் பேசறதில்லை. சும்மா அவரை பார்ப்பேன்.
இந்த வீட்ல காலையில 9 மணியானா வீட்ல இருக்கற எல்லாரும் கிளம்பி போயிடுவாங்க, அப்ப நான் மட்டும்தானே அப்ப இப்படிதான் வந்து உட்கார்ந்துக்குவேன், அதே போல சாயங்காலமும் உட்கார்ந்துக்குவேன், இது சுந்தரத்துக்கும் தெரியும் வைத்திக்கும் தெரியும். என்னை கண்ணால பார்க்கறதுக்காகவாவது வைத்தி தினமும் நான் இருக்கற நேரத்தில அப்படி அவர் வீட்ல உட்கார்ந்து பார்ப்பாரு.
அப்படி அவர் பார்த்து வயிறு எரியனும்னு சுந்தரமும் என்னை இப்படி உட்கார வைச்சி அழகு பார்த்தாரு. இத்தனை வருஷம் ஓடிப் போச்சி. இன்னும் இந்த பழக்கம்தான் விடலை. ஏதோ என்னைப் பார்த்து அவர் சந்தோஷப்பட்டுக்கிட்டும்னு நானும் அமைதியா இருக்கேன்”
“நீங்க சரி பாட்டி அந்த தாத்தாவோட ஒய்ப் இருக்காங்களே அவங்க சந்தேகப்பட்டிருப்பாங்களே”
“அவளுக்கு தெரிஞ்சிதானே இந்த கல்யாணம் செஞ்சிக்கிட்டா. வைத்தியால என்னை நெருங்க முடியாது. சுந்தரம் இருக்கறவரைக்கும் தன் புருஷன் தன்கிட்டதான் இருப்பான்னு நம்பிக்கையில அவளும் காலத்தை ஓட்டிட்டா”
“இதுல சுந்தரம் தாத்தா செஞ்சதுதான் தப்பு” என அவள் சொல்ல பாட்டி பெருமூச்சு விட்டார். அந்நேரம் சுந்தரம் தாத்தாவே அங்கு வந்து சேர்ந்தார். அவரது சொந்த காரில் அவர் வரவும் கீர்த்தனா மரியாதைக்காக எழுந்து நின்று கைகூப்ப அவரோ
”யார்மா நீ” என திமிராக கேட்க அப்போதே அவளுக்கு அவரை பிடிக்காமல் போனது, அதற்குள் மித்ராவும் பவியும் அங்கு வந்தார்கள்.
”தாத்தா அவள் என் பிரெண்டோட பிரெண்ட்” என மித்ரா சொல்ல அவரும் சரியென தலையாட்டிவிட்டு தாமரை பாட்டியை பார்க்க அவரோ தலை குனிந்து அமைதியாக அமர்ந்து இருக்கவும்