“அப்ப டாக்டர் தொழில்”
“அதான் வீட்லயே 7 டாக்டருங்க இருக்காங்களே இதுல நான் எதுக்கு ஏதோ தாத்தா சொன்னதால டாக்டரானேன். என்னை வேலை செய்ய சொல்லி அவர் கட்டாயப்படுத்தினா நான் வீட்டை விட்டு ஓடிடுவேன், அதுக்குள்ள எப்படியாவது பேஷன் உலகத்தில நான் நுழையனும் அதுக்காகதான் நான் போராடறேன். என்னோட இந்த போராட்டத்துல பவி எனக்குத் துணையா இருக்கா நீயும் எனக்கு துணையா இருப்பியா”
“இல்லை நான் வரலை, எனக்கு வேலைதான் முக்கியம் நான் இன்னும் 1 மாசம்தான் இங்க இருப்பேன் அடுத்த மாசம் நான் போயிடுவேன்”
“இருக்கறவரைக்கும் எனக்கு உதவி செய்யலாமே”
“இல்லை வேணாம் வேணாம் எனக்கு பேஷன்ல விருப்பம் இல்லை” என சொல்லவும் அந்த பெண்கள் தங்களுக்குள் சிறிது பேசிவிட்டு
”வா கீர்த்தனா வீட்டுக்கு போலாம்” என அழைக்க கீர்த்தனாவோ
”இல்லை நான் பாட்டி கூட இருந்திட்டு 9 மணிக்கா வரேன். எனக்கு பாட்டியோட இருக்க பிடிச்சிருக்கு” என சொல்ல பவியும் அங்கிருந்து சென்றுவிட அவள் சென்றதும் பாட்டியை காண உள்ளே செல்லாமல் வெளியே வந்தாள்.
தன் செல்போனில் ரிக்கார்டு செய்த பாட்டி சொன்ன கதையை சேவ் செய்து பத்திரப்படுத்தியவள் தன்னுடைய காதலுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என பயந்தாள். வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவளைக் கண்ட தேவா அவளுக்கு போன் செய்தான். ரிங் வரவும் போனைப் பார்த்தாள் அதில் அவனது பேரை புருஷன் என சேவ் செய்திருந்தாள். உடனே போனை ஆன் செய்தவள்
”நான் உங்களைப் பார்க்கனும் பேசனும் இப்பவே” என அவள் சொல்லிவிட்டு போனை