ஆனா சுந்தரம் என்னை விடலை அப்பவே சுந்தரத்துக்கும் எனக்கும் அவசரமா கல்யாண ஏற்பாடு செஞ்சாங்க, நான் என் அப்பா அம்மாகிட்ட அழுதேன் புலம்பினேன். ஒரு நாள் வைத்தி என்னை வீட்டை விட்டு ஓடி வர சொல்லிச் சொன்னாரு. நானும் சரின்னு சொன்னேன். கல்யாணத்துக்கு 2 நாள் இருக்கறப்ப நான் ஓடிப்போக நினைச்சேன். அதுக்காகவே கிணத்துபக்கமா வந்து நின்னாரு. கட்டின சேலையோட நான் வாசப்படி இறங்கி அவர்கிட்ட போறதை என் அப்பா பார்த்து என்னை திட்டி அவரை விரட்டி என்னை அடிச்சின்னு பெரிய பிரச்சனையாயிடுச்சி.
அதுல என் அப்பா நான் இப்படி போனா மானம் போனா விசத்தை குடிச்சிடுவேன்னு மிரட்டினாரு. அந்த வயசுல நான் பயந்துட்டேன். வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணம் ஆனதும் சுந்தரம் ஜெயிச்சதா வைத்திக்கிட்ட சொல்ல அந்த கோபத்தில வைத்தி சந்நியாசம் போல போய்ட்டு 2 வருஷம் கழிச்சி யார்கிட்டயோ நாட்டு மருத்துவத்தை கத்துக்கிட்டு வந்து நின்னாரு.
அப்பவே எனக்கு ஒரு பையன் பொறந்தான். சந்நியாசியா போனவன் வரமாட்டான்னு நினைச்சவரு, வைத்தி வரவும் அவரை வெறுப்பேத்தறுதுக்காகவே அவருக்குன்னு இருந்த வீட்டில வைத்தியம் பார்க்க ஆசைப்பட்டாரு. இந்த வீட்டுக்கு நாங்க வந்தோம். வேணும்னே வைத்தி கண்ணு முன்னாடியே நான் இருக்கனும் அலையனும்னு கொண்டாந்து இங்க விட்டாரு”
“ஏன் அப்படி செய்யனும் அதான் நீங்க சுந்தரத்துக்கு கிடைச்சிட்டீங்களே, எதுக்காக பாவம் வைத்தி தாத்தாவ வெறுப்பேத்தனும்”
“காரணம் இருக்கு சுந்தரத்துக்கு பணக்காரனா இருந்த வைத்தியை பிடிக்கலை, அப்புறமா அவர் படிச்சி முடிச்சி டாக்டர் தொழில் பண்ண பின்னாடி சம்பாதிச்சி ஏகப்பட்டதை வாங்கி பணக்காரனா ஆனாரு. அதுவும் வைத்தியை விட அதிகமா இருக்கனும்னு நினைச்சாரு வைத்தி மேல சின்னப்ப இருந்தே இவனுக்கு பொறாமை, வயித்தெரிச்சல்.
அதுவும் நான் எப்பவும் வைத்தி கூடவே இருந்தது அவனுக்குப் பிடிக்கலை. வைத்தியை