“ஏன் பாட்டி தாத்தாக்கு பாடம் சொல்லித்தர வராதா”
“எனக்கும் சரி அவருக்கும் சரி, கணக்கு பாடம் தவிர எல்லாத்திலயும் நாங்க புலிதான், இந்த கணக்குதான் எங்களுக்கு வராது. அதுக்காகவே அந்த ஒரு பாடத்துக்காக நானும் அவரும் அந்த நண்பன் கிட்ட சேர்ந்து படிப்போம், அவனும் எங்களுக்கு சொல்லிக் கொடுப்பாப்ல”
“சரி அந்த நண்பன் பேரு என்ன?”
“ம் சுந்தரம்”
“ஓ சரி அப்புறம்”
“அப்புறம் என்ன இப்படியே நாள் வேகமாக ஓடி மாசங்களாச்சி. மாசங்களும் வேகமாக ஓடி வருடங்கள் ஆச்சி. நான் வயசுக்கு வந்தப்ப 8வது படிச்சிட்டு இருந்தேன். அம்புட்டுதான் வயசுக்கு வரவும் என்னை வீட்லயே அடைச்சிட்டாங்க”
“ஏன்?”
“அந்த காலத்தில இவ்ளோ படிக்க விட்டதே பெரிசு, அதுவரைக்கும் நானும் அவரும் ஒண்ணுமண்ணா புழங்குவோம், அவருக்கு அப்பவே சொந்தமா நிலங்கள் இருந்துச்சி. பள்ளிக்கூடம் விட்டதும் நானும் அவரும் அங்க போய் விளையாடுவோம், அந்த காலம் இனி வரவே வராது” என பாட்டி பெருமூச்சு விட
”சரி பாட்டி அப்புறம் என்னாச்சி”
“பிறகா சொல்றேன் நான் பள்ளிக்கூடத்துக்கு போகாம இருக்கவும், அவரால தாங்கிக்க முடியலை. எங்கப்பாவும் விவசாயம் செய்றவருதான், அதுவும் அவரோட நிலத்தில விவசாயம் செய்றவரு. நாங்க ஏழை குடும்பம், அவங்க நிலத்தில வேலை செஞ்சி