அந்த வயதிலும் ஓடினார் பாட்டி கோசலை, அதைக்கண்ட சரண்யா சிரித்தாள். கையில் இருந்த புடவையைக் கண்டவளுக்கு தேவாவின் நினைப்பு வந்தது
”அவருக்கு யாரும் இல்லைன்னா எதுக்காக இந்த புடவை எடுக்கனும், எனக்காக எடுத்திருப்பாரோ நம்மகிட்டயே இருக்கட்டும் எப்படியும் புடவைக்காக வருவார்ல அப்ப அவர்ட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்” என நினைத்துக் கொண்டே தன் அறைக்கு சந்தோஷமாகச் சென்றாள் சரண்யா
அதே சமயம் பக்கத்து வீட்டில் பாட்டி செந்தாமரையுடன் பேசிக் கொண்டிருந்த கீர்த்தனாவோ
”பாட்டி நீங்க சொல்றது வேடிக்கையாயிருக்கு” என சொல்லிவிட்டு எதேச்சையாக பக்கத்து வீட்டைப் பார்க்க அங்கு தேவா இருப்பதும் தன்னையே பார்ப்பதையும் கண்டவளுக்கு வெட்கம் வந்தாலும் பாட்டி இருப்பதைக் கண்டு வேண்டுமென்றே
”பாட்டி அங்க பாருங்க அந்த 2 பேரும் நம்மளையே பார்க்கறாங்க கெட்ட பசங்க” என அவள் செல்லமாக சொல்ல தாமரையோ அதைக்கேட்டு
”ஏய் என்ன பேச்சு இது, அவர் ஒண்ணும் கெட்டவர் இல்லை” என வெட்கப்பட்டு சொல்ல கீர்த்தனாவிற்கு வியப்பாக இருந்தது
”பாட்டி” என அவள் இழுத்து சிரிக்கவே அவர் முகத்தை மூடிக் கொள்ள
”என்ன பாட்டி நடக்குது இங்க” என கேட்க அவரோ முகத்தை திறந்து சிரித்தபடியே
”ஒண்ணும் இல்லையே”
“இல்லையே நேத்து என்னடான்னா ஸ்பெஷலா பிரசாதம் கொடுத்துவிட்டீங்களே யாருக்காக?”