(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”எத்தனை பொண்ணுங்களா என்னடா சொல்ற”

   

“ஆமாம் தாத்தா அதோ பக்கத்தில விக்ரம் தங்கச்சி பவி இருக்காளே, அவள் கூட என்னை விரும்பறாளாம் தாஸ் சொல்றான் என சொல்ல அவருக்கு சிரிப்பே வந்தது.

   

”தாத்தா ஏன் சிரிக்கறீங்க”

   

“உன் காட்டுல மழைன்னு சொல்லு”

   

“தாத்தா போதும் நானே சிக்கல்ல இருக்கேன்” என கவலையாக சொல்லிவிட்டு கீர்த்தனாவைப் பார்க்க, அவளோ பாட்டியிடம் ஏதோ பேசி விழுந்து விழுந்து சிரித்ததால் அவனது மனமும் தடுமாற ஆரம்பித்தது. அவளையே ரசித்துப் பார்த்தான் தேவா

   

வீட்டுக்குள் வந்த சரண்யாவை பார்த்த பாட்டியோ

   

”வாம்மா வா என்னம்மா துணி வாங்கிட்டியா”

   

“ஆமாம் பாட்டி வாங்கிட்டேன். அப்புறம் நான் உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும்”

   

“தாராளமா சொல்லு முதல்ல என்ன துணி வாங்கின அதைக் காட்டு” என அவளிடம் இருந்த பையை வாங்கி உள்ளே இருப்பதை ஆவலாக பிரிக்க பிரிக்க அதில் தேவா வாங்கிய புடவையும் இருக்கவே அதைப் பார்த்து அதிர்ந்தாள் சரண்யா

   

”அய்யோ இது அவர்தாச்சே, இதை ஏன் தூக்கிட்டு வந்தேன்” என நினைத்தவள் அவசரமாக அதை எடுக்க பாட்டியோ

   

”புடவை நல்லாயிருக்கே கொடு நான் பார்க்கறேன்”

   

“இல்லை பாட்டி இது நான் எடுக்கலை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.