Page 15 of 38
“மீட்டிங் என்னாச்சி”
”நல்லபடியா முடிஞ்சது டீலிங் ஓகே ஆச்சி, நாளைக்கு சைட் போய் பார்க்கனும்”
“நீ பார்க்கனுமா இல்லை உன் அண்ணனா”
“அண்ணாதான் என்கிட்ட சொன்னாரு”
“ஓ சரிம்மா சரி நீ எங்க இருக்க இப்ப”
“ஓட்டல்ல”
“சரி நான் வரேன் வெளிய வந்து நில்லு”
”எவ்ளோ நேரம் ஆகும்”
“10 நிமிஷம்” என சொல்ல கீர்த்தனா ஏதோ சைகை செய்ய
”ஆ இல்லை இல்ல ஒரு அரை மணி நேரம் ஆகும்” என சொல்ல அவளும் சரியென போனை வைத்துவிட்டாள்.
”என்ன கீர்த்தனா வேற ஏதாவது பேசனுமா”
“ஆமாம்”
”என்ன விசயம்?”
“நான் ப்ளான் போட்டு முடிச்சிட்டேன் அதை உங்களுக்கு காட்டனும்”
“நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கறேன்”