”ஓ சரி நான் கடைக்குப் போறேன்”
“சரிண்ணா நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பேசிக்கனும் அதனால நான் மித்ரா வீட்டுக்குப் போறேன் அண்ணா”
“சரி ஆனா ஜாக்ரதை அந்த பெரிய டாக்டர்கிட்ட மாட்டிக்காத” என சொல்ல மித்ரா சிரித்தாள்
”நீ ஏன் சிரிக்கற?”
“ஒண்ணுமில்லை நாங்கதான் அவரை பார்த்து பயப்படறோம்னா நீங்களுமா”
“என்ன செய்றது” என தலையில் அடித்துக் கொண்டு அவன் சென்றுவிட இரு பெண்களும் அமைதியாக ஏதேதோ பேசிக் கொண்டு டாக்டர் சுந்தரம் வீட்டுக்குச் சென்றார்கள்.
கோயிலுக்குள் சாமியை கும்பிட்டு விட்டு சுற்றி முற்றி பார்த்தான். எங்கும் அவள் இல்லாமல் போகவே சட்டென பின் பக்கம் இருந்த மரங்கள் இருந்த தோப்புக்குச் சென்றான். அங்கு ஒரு மரத்தின் பக்கத்தில் கீர்த்தனா இருக்கவே அங்கு சென்றான், தாஸ் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
கீர்த்தனாவிடம் தேவா சென்றதும் அவனைக் கண்டதும் அச்சத்தில் கட்டியணைத்துக் கொண்டாள் கீர்த்தனா
”பயப்படாத நான் இருக்கேன்ல”
“நீங்க சொன்ன பின்னாடிதான் நான் கவனிச்சேன், அந்த விக்ரம் என்கிட்ட ரொம்ப வழியறாரு. எனக்கு பயமாயிருக்கு”
“சீ பைத்தியம் என்ன இது”