“ஆமாம் ஆமா அந்த பொண்ணு பக்கத்து வீட்டு கீதா டாக்டர் பொண்ணுதானே”
“ஆமாம்ணா பேரு மித்ரா, அதுவும் டாக்டருக்குதான் படிக்குது என்ன பேஷன்ல ஏதோ சாதிக்கனுமாம்.”
“சரி அவளுக்கும் பவிக்கும் என்ன சம்பந்தம்”
“அதுவா இவளுக்கும் பேஷன் பிடிக்குமாம், படிக்கறப்பவே பார்ட் டைமா ரெண்டு பேரும் ஒரு பேஷன் கம்பெனியில வேலை பார்த்திருக்காங்க அதான்”
“கணக்கு வழக்கு என்னாச்சி”
“பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்”
“அவள் ஒழுங்கா வேலை செய்றாளா” என கேட்க விக்ரம் சற்று சிரித்து
”ஆமாம்ணா கரெக்டா வேலை செய்றா” என சொல்ல வியந்தான் தேவா, அதற்குள் கீர்த்தனா உடனே கோயிலுக்குள் செல்வதைக் கண்டு
”சரி நான் கோயிலுக்குப் போகனும் நீ கிளம்பு” என சொல்ல அவனும் திரும்பிச் சென்றான், தேவா தாஸுடன் அங்கு வர பவி மித்ராவிடமும் விக்ரமிடமும் பேசிக்கொண்டே தேவாவை பார்த்துச் சிரிக்க அதற்கு பதில் சிரிப்பு தராமல் மித்ராவையே ஏற இறங்கப் பார்த்துவிட்டு கோயிலுக்குள் சென்றான் தேவா.
அவன் சென்றதும் விக்ரம் பவியிடம்
”கீர்த்தனா எங்க?”
“அவள் விளக்கு போட போயிருக்கா”