“ஏன் உனக்குத் தெரியாதா“
“பாட்டிக்கு தெரியலை போல அவங்க தப்பா நினைச்சிருக்காங்க உன்னை யாரு தப்பா சொல்ல சொன்னது”
“நான் சொல்லலை அவங்களா அப்படி நினைச்சா நான் என்ன செய்றது”
“இதப்பாரு ஒழுங்கா உண்மையை சொல்லு”
“சத்தியமாதான் சொல்றேன்”
“அப்ப சரி வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா நீ பாட்டிகிட்ட உண்மையை சொல்ற புரியுதா”
“கண்டிப்பா சொல்றேன் ஆனா பாட்டி காது கொடுத்து கேட்கனுமே“
“எல்லாம் கேட்பாங்க நீ மட்டும் தப்பு பண்ண அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது”
“இல்லை இல்லை நான் பார்த்துக்கறேன்”
“என்ன சொல்றான் உன் அண்ணன்”
“ஒண்ணுமில்லை உன்கிட்ட ஜாக்ரதையா இருக்க சொன்னாரு”
“நான் உன்கிட்ட வர்றதேயில்லையே அப்புறம் என்னவாம் இவ்ளோ பயப்படறவன் உன்னை அவன்கூடவே வைச்சிக்க வேண்டியதுதானே”
“சரி இப்ப வர்றியா இல்லையா”