(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

வீட்டின் முன் கார் நின்றதும் மூவரும் இறங்கினார்கள். அதில் சரண்யா அவசரமாக இறங்கி தனது துணிகளுடன் தேவா எடுத்த துணியையும் எடுத்துக் கொண்டு செல்ல முனைய அவளைத் தடுத்தான் தேவா

   

”ஓய் பாட்டிகிட்ட போய் இப்பவே என்ன ஏதுன்னு உண்மையை சொல்ற நீ சொதப்பினா அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன்” என சொல்ல அவளும் சரியென உள்ளே சென்றாள்.

   

அங்கு தேவாவின் தாத்தா தோட்டத்தின் ஒரு இடத்தில் நாற்காலியை போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கவே அவ்விடம் சென்றான்

   

”என்ன தாத்தா இங்க இருக்கீங்க வேலையில்லையா”

   

“காத்து வாங்க வந்தேன்” என சொல்ல தேவா பக்கத்து வீட்டைப் பார்த்தான். அங்கிருந்து பார்த்தால் பக்கத்து வீட்டின் முன்பக்கம் பளிச்சென்று தெரியவே அங்கு கார்டனில் பவியும் மித்ராவும் பேசிக் கொண்டிருக்க, வீட்டு வாசல் படிக்கட்டில் கீர்த்தனாவும் தாமரை பாட்டியும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு தேவா தானும் ஒரு சேர் கொண்டு வந்து தாத்தா பக்கத்தில் போட்டு அமர அவரோ

   

”நீ என்ன செய்ற இங்க”

   

“காத்து வாங்க வந்தேன் தாத்தா” என சொல்ல அவரும் அமைதியானார். 

   

”பக்கத்து வீட்ல 3 பொண்ணுங்க இருக்கவும், உனக்கு காத்து வாங்க ஆசை வந்துச்சா” என தாத்தா மனதில் நினைத்துக் கொண்டு அவனிடம்

   

”உனக்குதான் வீட்ல ஒருத்தி இருக்காளே, பின்ன எதுக்காக பக்கத்து வீட்டு பொண்ணுங்களை சைட் அடிக்கற”

   

“சரண்யாவை சொல்றீங்களா“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.