“பின்ன”
“அது தேவா எடுத்தாரு”
“ஓ அப்படியா சரி சரி” என சிரித்தவர்
”எதுக்கு சிரிக்கிறீங்க?”
“அவன் உனக்கு புடவை எல்லாம் எடுத்துக் கொடுக்கற அளவுக்கு வந்துட்டானா, அப்ப சீக்கிரமா நான் முகூர்த்தம் வைச்சாகனும் இல்லைன்னா என்னை கொள்ளு பாட்டியாக்கிடுவான்” என சொல்ல அதிர்ந்தாள் சரண்யா
”இல்லை அவர் இதை வேற யாருக்காகவோ வாங்கியிருக்கலாமே”
“வேற யாருக்கோவா அவனுக்கு யார் இருக்கா இங்க”
“அதான் வீட்ல முறைப் பொண்ணுங்க இருக்காங்களே”
“அதெல்லாம் இல்லை 2 பொண்ணுங்களுக்கும் 2 பேர் இருக்காங்க, தேவாவுக்குதான் யாரும் இல்லை” என சொல்ல அந்நேரம் அங்கு வந்த சுப்ரஜா
”ஏன் நான் இருக்கேனே” என்றாள் அவளது பேச்சைக் கேட்டு சிரித்த சரண்யாவைக் கண்ட பாட்டியும்
”நீ எப்பவும் இப்படியே சிரிச்சிக்கிட்டே இருக்கனும் அதான் என் ஆசை சரியா” என சொல்லிவிட்டு சுப்ரஜாவை பிடித்தார்
”வா ஒழுங்கா வந்து பால் குடி, எப்ப பாரு விளையாட்டு, பால் குடிச்சிட்டு ஸ்கூல் ஹோம் ஒர்க் பண்ணு வா” என அவளை இழுக்க அவள் பாலா என்றதுமே ஓட அவள் பின்னால்