“ஆமாம்”
“அய்யோ தாத்தா அவள் அந்த ஹாஸ்டல் கட்ட வந்தானே அப்பாவோட வரவழைப்பு ஓட்டல்ல தங்க வைச்சிருக்கேனே சரண் அவனோட தங்கச்சி. ஓட்டல்ல எப்படி தங்க வைக்கிறதுன்னு அப்பாதான் சரண்யாவை வீட்ல தங்க வைக்க சரண் கிட்ட சொன்னாராம் அதான் அவளை கொண்டாந்து இங்க விட்டேன் அவளை நான் விரும்பலை தாத்தா” என சொல்ல
”ஆனா உன் பாட்டி ஏதோ கதை சொல்றாளே”
“பாட்டி தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காங்க, நானும் அவளும் ஒண்ணா வீட்டுக்கு வரவும் தப்பா நினைச்சிட்டாங்க உண்மை இதுதான் நீ வேணும்னா அவள்ட்டயே கேளு”
“சரி நான் பேசறேன் ஆனா இந்த விசயம் பெரிசாகற மாதிரி தோணுது”
“ஆகாது நான் சரண்யா கிட்ட சொன்னேன், இப்பவே பாட்டிகிட்ட போய் பேசுன்னு”
“அவள் பேசுவாள்ன்னு நீ நினைக்கறியா எனக்கு அப்படி தோணலை”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“நீயில்லாதப்ப இந்த வீட்ல இருக்கற எல்லார்கிட்டயும் உன்னை பத்தி விசாரிச்சி தெரிஞ்சிக்கறா”
“ஏன்?” என அலறினான்
”அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கலாம்” என தாத்தா கூலாகச் சொல்ல
”அய்யோ எத்தனை பொண்ணுங்களுக்குதான் என்னை பிடிக்குமோ“ என தேவா அலுத்துக் கொள்ள