(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

“ஏன் இப்ப என்ன?”

   

“இப்ப எங்க இருக்கு ப்ளான்”

   

“வீட்ல இருக்கு”

   

“வீட்டுக்கு எப்படி வர்றது”

   

“விக்ரம் இல்லை வெளிய போறாராம், பவியும் அவள் ப்ரெண்ட் மித்ரா வீட்டுக்குப் போயிருக்கா, பாட்டி பக்கத்து வீட்டு ஆளுங்களோட பஜனை கோயிலுக்குப் போயிருக்காங்க நான் மட்டும்தான் தனியா இருக்கேன்” என அவள் சொல்ல அவன் சிரித்தான்

   

”இப்படி மீட் பண்றது ரொம்ப ரிஸ்க், திடீர்ன்னு யார் வந்து நின்னாலும் உன் மானம் போகும். சரியா, நமக்கு ஆபிஸ் இருக்கு அங்க பார்த்துக்கலாம் நீ இப்ப வீட்டுக்கு போ இல்லை வேணாம் நீ தனியா இருக்கற விசயம் விக்ரமுக்கு தெரிஞ்சா உன்கிட்ட வந்து வழிவான், நீ நேரா பவிகிட்ட போ அந்த மித்ரா யாரோ இல்லை. என் வீட்டு பக்கத்து வீட்டு பொண்ணுதான், நீ நேத்து தாமரையை பார்த்தல்ல அவளோட பேத்திதான் அவள். நீ அந்த வீட்டுக்கு போய் தாமரை கூட இருந்துக்க. 

   

அப்பறம் அந்த வீட்ல யார் கூடவும் பழகவேணாம் கீதாக்கா இருப்பாங்க, மித்ராவோட அம்மா அவங்க கூட பேசு, மத்த எல்லாருமே வில்லங்கம் பிடிச்சவங்கதான் இப்ப நீ கிளம்பு” என சொல்ல அவளும் சோகமாக 2 அடி எடுத்து வைக்க அவளது சோகத்தைக் கண்ட தேவாவோ அவளை சந்தோஷப்படுத்த நினைத்து அவளை இழுத்து கன்னத்தில் முத்தம் வைக்கவும் தாஸ் அங்கிருந்தபடியே அலறினான். அவனது சத்தம் கேட்டு இருவரும் பிரிந்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

   

தாஸ் அவசரமாக கீர்த்தனாவிடம் ஓடிவந்து அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டே தேவாவை முறைத்துவிட்டு கோயிலை விட்டு வெளியே கூட்டிச் சென்று விட்டான். அவளும் தேவாவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மெல்ல பவியை தேடிச் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.