(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

சென்றாள்.

   

தேவா காரில் ஏறியதும் தாஸ் காரில் ஏறி தேவாவை பார்த்து முறைக்க

   

”ஏன்டா முறைக்கற?” என கேட்க தாஸ் ஏதோ சைகை செய்ய அவன் சிரித்தான்

   

”ஏன் நான் உன் தங்கச்சிக்கு முத்தம் தரக்கூடாதா என்ன அவளுக்கும் பிடிச்சிருந்தது. கொடுத்தேன் உனக்கென்ன இப்ப” என கேட்க அவனோ முறைத்து இது கூடாது தப்பு, இனிமேல் செய்யாதே என சைகை செய்ய தேவா சிரித்துக் கொண்டே ஓட்டலை நோக்கி வண்டியை ஓட்டினான்.

   

ஓட்டல் வாசலுக்கு வந்ததும் தேவா தாஸிடம்

   

”போய் அந்த சரண்யாவை கூட்டிட்டு வா“ என சொல்ல அவனும் சென்றான்.

   

5 நிமிடம் கழித்து இருவரும் திரும்பி வந்து வண்டியில் ஏறிக் கொண்டதும் எப்பொழுதும் வாங்கும் துணிக்கடைக்கு செல்லாமல் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடைக்கு சென்றான். அங்கு  உள்ளே பெண்கள் செக்ஷனில் சரண்யா துணி எடுக்க வேண்டுமே என 3 துணிகளை எடுக்க தாஸ் ஒரு பொம்மை அணிந்திருந்த புடவையைக் கண்டு சிரித்தவன் கடைக்காரனிடம் அதை கேட்க அதைப்பார்த்த தேவா

   

”யாருக்குடா இந்த புடவை” என கேட்க அவன் கீர்த்தனாவுக்கு என சொல்ல உடனே தேவாவும் வேறு வேறு பொம்மைகள் அணிந்திருந்த புடவைகளையும் சுடிதார் மற்றும் பல்வேறு உடைகளையும் பார்த்தான். அது எதுவும் பிடிக்காமல் போகவே வேறு செக்ஷன் சென்று தேடிப்பிடித்து அவளுக்கு கேரளா காட்டன் சேரியை பிடித்துக் கொண்டு பில்கவுண்டருக்கு வர அங்கு தாஸ் தான் எடுத்த புடவைக்கான பில்லை தானே கட்டிவிட்டு தேவாவை முறைத்தான்

   

“என்னடா நீதான் வாங்குவியா, நானும் வாங்குவேன் போடா” என சிரித்தபடியே சொல்ல தலையில் அடித்துக் கொண்டான் தாஸ் அந்நேரம் சரண்யா வரவே அவளுடைய துணிகளுக்கு பில் போடப்பட்டு பணம் தந்துவிட்டு துணி பைகளுடன் வீடு திரும்பினார்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.