(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“ஆமாம்”

   

“அவர் பேரு என்ன”

   

“என்னால சொல்ல முடியாது” என பாட்டி வெட்கப்பட

   

”ஐ ஐ வெட்கமா நான் சொல்லவா வைத்தியநாதன்”

   

“அதேதான் முதல் நாள் என்னை அவர் தன் பக்கத்தில உட்கார வைச்சி எனக்கு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து சமாதானம் செஞ்சாரு”

   

“அடடே சூப்பர் பாட்டி அப்புறம்”

   

“அப்புறமா அவரோட சிநேகிதன் ஒருத்தன் இருந்தான். அவர் கூடவே இருப்பான். அவனும் எங்களோட சேர்ந்துக்கிட்டான். நாங்க 3 பேருமே ஒண்ணா விளையாடுவோம், ஒண்ணா படிப்போம், ஒண்ணாவே பள்ளிக்கூடம் போவோம், வருவோம் அதுல அவர் என் கையை பிடிச்சிக்கிட்டுதான் இருப்பாரு”

   

“அப்படியா” என அவள் இழுத்துச் சொல்லி சிரிக்கவும் தாமரைக்கு வெட்கமே வந்தது. ஏற்கனவே அவர் தாமரை மலரை போல அழகு நிறம், இதில் அவர் வெட்கப்பட்டதைக் கண்ட தாத்தா வைத்தியநாதனுக்கு சிரிப்பே வந்தது. அவரின் சிரிப்பைக் கண்ட தாஸ் அதிர்ந்தான் அதை விட தேவா கீர்த்தனாவைக் கண்டு வெட்கப்படுவதைக் கண்டு நொந்தான். இரு காதலர்களைக் கண்டு வெறுப்பானவன் கோபம் வந்து நேராக திண்ணையில் சென்று படுத்துக் கொண்டான்.

   

அங்கு பாட்டியோ

   

”வருஷங்களும் வேகமாக போச்சி. அவர்தான் எனக்கு கமர்கட்டு, ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் வாங்கித்தந்து என்னை பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரதுன்னு பார்த்துக்குவாரு. அவரோட நண்பன் இருக்கான்ல அவன் எனக்கு பாடம் சொல்லித்தருவான்“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.