“கேளு என் அப்பா என்ன நினைச்சாரு நாமதான் இப்படி விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கோம், நம்ம பொண்ணுக்கு இன்னொரு விவசாயம் செய்றவனா அதுவும் நம்ம முதலாளி பையனுக்கே கல்யாணம் பண்ணி வைச்சா நாளைக்கு ஊர் சிரிக்கும், இதுக்காகத்தான் பொண்ணை பெத்து ஊர் மேய விட்டியான்னு பேசும்னு பயந்து அந்த சுந்தரத்துக்கு சரின்னுட்டாரு. எனக்கு கோபமே வந்துடுச்சி. என் அப்பாரு கிட்ட நான் சண்டை போட்டேன் முடியாதுன்னு சொன்னேன். என்னை அடிச்சிட்டாரு. அந்த சுந்தரம் கால் காசு வரதட்சனை கேட்காம உன் அழகுல மயங்கி கட்டிக்கறதா சொல்றாரே உனக்கென்ன கேடுன்னாரு. இந்த விசயம் தெரிஞ்சிக்கிட்ட வைத்தி சுந்தரத்தோட சண்டை போட்டாரு”
“சண்டையா என்ன சண்டை”
“வைத்தி என்னை காதலிக்கற விசயம் சுந்தரத்துக்கு பள்ளிக்கூடத்தில இருக்கறப்பவே தெரியும் அப்ப வைத்தி குடும்பம் பெரிய ஆளுங்க, அப்ப சுந்தரம் கூட சாதாரண ஏழைங்கதான் என்னைப் போல, அவனும் என்னை காதலிச்சிருக்கான் போல, அது வைத்திக்கு தெரியாது.
வைத்தியை விட பெரியாளா வந்தா என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு அந்த சுந்தரம் டாக்டருக்கு கஷ்டப்பட்டு படிச்சிட்டு வந்தான். வந்த உடனே என்னை பொண்ணு கேட்டு சம்மதம் முடிச்சான். சுந்தரத்தை ரொம்ப நம்பினாரு வைத்தி. நண்பனே துரோகம் செய்யவும் சுந்தரத்தோட சண்டையே போட்டாச்சி. இதுல பஞ்சாயத்து வரைக்கும் போயிட்டாங்க.
ஆனா என் அப்பா பஞ்சாயத்துல எனக்கு சுந்தரம்தான்னு பேசி முடிவே பண்ணிட்டாரு. அதுல வைத்திக்கு கோபம், அவரோட அப்பாக்கு இன்னும் கோபம் இருக்காதா பின்ன அவரே மனசு இறங்கி தன்கிட்ட வேலை செயறவனோட பொண்ணை மருமகளா நினைச்சது பெரிசு, அந்த விசயம் என் அப்பாக்கு தெரிஞ்சும் எனக்கு துரோகம் பண்ணிட்டு இன்னொருத்தன் வீட்டுக்கு பேசி முடிச்சதா நினைச்சி எங்கப்பாவை வேலையிலிருந்து விரட்டிட்டாரு.