(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

இல்லையா ஜெயில்ல இருந்திருப்பாரு. இன்னிக்கு வரைக்கும் வைத்தி அவர் பொண்டாட்டி கோசலை கூட வாழ்ந்தாலும் என்னை மனசில நினைச்சிக்கிட்டுதான் இருக்காரு”

   

“எப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க”

   

“அப்ப பிரச்சனை முடிஞ்ச பின்னாடி வைத்தி ஒதுங்கிட்டாரு. அதே போல சுந்தரமும் ஒதுங்கிட்டாரு. வைத்தியும் தன் வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சாரு. 2 பையன்கள் பெத்துக்கிட்டாரு. நான் 3 பையன்கள் பெத்துக்கிட்டேன்.  அப்புறம் எங்களுக்கு பேரக்குழந்தைங்க பொறந்தாங்க. அப்ப எனக்கு 2 பேரனும் 1 பேத்தியும் பொறந்தா, அதே போல அந்த பக்கம் 3 பேரன்கள் பிறந்தாங்க எங்க அந்த வீட்டு பையன்கள்ல ஒருத்தன் நம்ம மித்ராவை கட்டிப்பானோன்னு மித்ரா குழந்தையா இருந்தப்பவே திரும்பவும் சுந்தரம் வலியபோய் வைத்தியை சண்டைக்கு இழுத்தான். 

   

ஏற்கனவே வைத்திக்கு ஒரு கோபம், டாக்டருக்கு படிச்சதாலதான் நான் சுந்தரத்தை கட்டிக்க வேண்டியதா போச்சின்னு நினைச்சி அப்ப சுந்தரத்துக்கிட்ட சொன்னாரு என் வீட்டுக்கு இனி எப்பவுமே டாக்டர் வாடையும் வராது, டாக்டர் சம்பந்தமும் வராதுன்னு சொல்லிட்டாரு. அதுக்காகவே வைத்தி தன் பையன்களையும் பேரன்களையும் டாக்டருக்கு படிக்க வைக்காம வேற படிப்புல படிக்க வைச்சாரு.

   

 ஆனா சுந்தரம் தன் 3 புள்ளைகளையும் டாக்டருக்கு படிக்க வைச்சி அவங்களுக்கு வர்ற மருமகள்ங்க டாக்டராதான் இருக்கனும்னு தேடிப்பிடிச்சி கட்டி வைச்சாரு. அதுக்குள்ள சின்னதா இருந்த ஆஸ்பிட்டலை இடிச்சிட்டு 3 அடுக்கா கட்டிட்டாரு. புள்ளைகளும் மருமகள்களும் அங்கதான் வேலைக்கு போறாங்க”

   

”எதுக்காக மருமகள்கள் கூட டாக்டரா இருக்கனும்னு நினைச்சாரு”

   

“வைத்தி சொன்னாருல்ல டாக்டர் சம்பந்தம் தேவையில்லைன்னு, அதனால தன் புள்ளைங்க ஒருவேளை டாக்டர் படிக்காத பொண்ணா கல்யாணம் பண்ணா எங்க வைத்தி மித்ராவை பிடிப்பாறோன்னு நினைச்சாரு“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.